For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சிபாரிசு இருந்தால் தான் கேப்டன் பதவி” பிசிசிஐ மீது ஹர்பஜன் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு.. முறைகேடா?

மும்பை: இந்திய அணியின் கேப்டனாக வேண்டுமென்றால் பிசிசிஐயில் அதிகாரிகளுக்கு நெருங்கியவர்களாக இருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் பூகம்பத்தை கிளப்பியுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், கடந்த 6 ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் சமீபத்தில் ஓய்வை அறிவித்தார்.

ஆனால் அவர் ஓய்வை அறிவித்ததில் இருந்து பிசிசிஐ மீதும், எம்.எஸ்.தோனி மீதும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்.

 தோனி மீது புகார்

தோனி மீது புகார்

சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்த ஹர்பஜன் சிங், தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்து அப்போதைய கேப்டன் தோனியிடம் பல முறை விளக்கம் கேட்டதாக கூறினார். ஆனால் அதற்கு தோனி எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை, ஒருவிதத்தில் என் வாய்ப்புகள் பறிபோனதற்கு தோனியும் மறைமுகமான காரணமாக இருக்கலாம் என்பது போல சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார்.

முறைகேடு?

முறைகேடு?

இந்நிலையில் மற்றொரு பூகம்பத்தை கிளப்பியுள்ளார். ஹர்பஜனிடம் கேப்டனாக நீங்கள் செயல்படவில்லை என்ற வருத்தம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கேப்டனாக செயல்படுவதும் ஒரு சாதனை தான். ஆனால் நான் கேப்டனாக நியமிக்கப்பட, எனக்கு பிசிசிஐ-ல் யாரும் நெருங்கியவர்கள் இல்லையே?.. இந்திய அணி கேப்டனாக ஆக வேண்டும் என்றால் பிசிசிஐ-ல் பெரும் அதிகாரத்தில் இருக்கும் யாரையேனும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அந்த சிபாரிஸில் தான் ஆக முடியும்.

கேப்டன்களுக்கே அட்வைஸ்

கேப்டன்களுக்கே அட்வைஸ்

நான் கேப்டன்சி செய்ய முழு தகுதியுடையவன். பல கேப்டன்களே எனது அறிவுரைகளை கேட்டு செயல்பட்டுள்ளனர். எனினும் கேப்டனாகவில்லை என்ற வருத்தம் எனக்கு இல்லை. என் தேசத்திற்காக நான் சிறப்பான சேவை செய்துள்ளேன் என்ற நிம்மதி எனக்கு உள்ளது என ஹர்பஜன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பிசிசிஐ நடவடிக்கை

பிசிசிஐ நடவடிக்கை

முன்பு தோனியின் கேப்டன்சியை தாக்கிய ஹர்பஜன், தற்போது பிசிசிஐ-க்கு இழுவுப்படுத்துவது போன்ற வார்த்தைகளை உதிர்த்துள்ளார். இதனையடுத்து அவர் மீது பிசிசிஐ சார்பில் ஏதேனும் நடவடிக்கைகள், பதில்கள் பாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 31, 2022, 14:38 [IST]
Other articles published on Jan 31, 2022
English summary
Harbhajan singh accuses, Players have to favourites of someone (powerful) in BCCI to become Indian team captain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+