Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நீங்க ஜெயிக்கனும்னா அத செய்தே ஆக வேண்டும்”.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. ஹர்பஜன் முக்கிய அட்வைஸ்!

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்றால் இந்திய அணி ஒரு முக்கிய விஷயத்தை செய்தே தீர வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பயிற்சி போட்டிகளை வேண்டாம் எனக்கூறிவிட்டு, ஸ்பின்னர்களுக்கு ஏற்ற பிட்ச்களில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ப்ளேயிங் 11 குழப்பம்

ப்ளேயிங் 11 குழப்பம்

போட்டிக்கான நாட்கள் நெருங்கிவிட்ட சூழலில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இன்னும் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளன. குறிப்பாக ஓப்பனிங்கில் சுப்மன் கில் விளையாட வேண்டுமா? அல்லது கே.எல்.ராகுல் ஆட வேண்டுமா? என்ற குழப்பம் உள்ளது. கே.எல்.ராகுல் அதிக அனுபவம் கொண்ட வீரர் என்பதால் முக்கியமான இந்த தொடருக்கு ஓப்பனிங் ஆட வேண்டும் எனக்கூறப்பட்டு வருகிறது.

ஹர்பஜனின் கருத்து

ஹர்பஜனின் கருத்து

இந்நிலையில் சுப்மன் கில் தான் ஆட வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தான் முக்கியமான ஒன்று. ஏனென்றால் அவர்கள் தான் ஒரு தொடர் எப்படி முடியவேண்டும் என முடிவெடுப்பார்கள். அந்த வகையில் பார்த்தால் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தான் இந்தியாவுக்கு ஓப்பனிங் செய்ய வேண்டும்.

காரணம் என்ன

காரணம் என்ன

சுப்மன் கில் தற்போது வேற லெவல் ஃபார்மில் இருக்கிறார். கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர் தான். ஆனால் கடந்த 2022ம் ஆண்டு 3 வடிவ கிரிக்கெட்டிலும் கில்லின் புள்ளிவிவரங்கள் பெரியளவில் இல்லை. மற்றொருபுறம் சுப்மன் கில் அடுத்தடுத்து சாதனைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கில்லுக்கு தான் வாய்ப்பை தர வேண்டும்.

அதை செய்ய வேண்டாம்

அதை செய்ய வேண்டாம்

வாய்ப்பு தருகிறோம் எனக்கூறிவிட்டு ஒரே ஒரு போட்டியில் மட்டும் கொடுக்கக்கூடாது. 4 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வாய்ப்பை கொடுக்க வேண்டும். தற்போது இருக்கும் அதே ஃபார்ம் மற்றும் நம்பிக்கையுடன் விளையாடினால் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடுவார். எனவே அவர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

Story first published: Monday, February 6, 2023, 22:46 [IST]
Other articles published on Feb 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+