ரோகித் - கோலி இணைந்து எடுத்த முடிவு.. தொடர்ந்து வாய்ப்பு பெறும் ஸ்டார் ப்ளேயர்.. ஹர்பஜன் பாராட்டு!
மும்பை: விராட் கோலி, ரோகித் சர்மா இணைந்து எடுத்த முடிவு ஒன்று பிரமிப்பூட்டுவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25ம் தேதி முதல் கான்பூர் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான அணித் தேர்வுகள் தான் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வில் இருப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் அஜிங்கியா ரகானே கேப்டனாக செயல்படவுள்ளார். ரகானே அணியில் இடம்பெற்றதே அதிசயமாக தான் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளில் அவரின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்து வருகிறது.

குவிந்த விமர்சனங்கள்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட அவர் 7 இன்னிங்ஸ்களில் 7 முறை 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதில் 6 முறை 20 ரன்களுக்கு உள்ளாகவே விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரிக்கை வலுத்துவந்த சூழலில் தான் நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி தரும் விஷயம்
இந்நிலையில் ரகானேவின் சேர்ப்புக்கு ஹர்பஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ரகானேவின் ஃபார்ம் கடந்த சில நாட்களில் மோசமாக உள்ளது. அனைவரும் அவரை நீக்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதுபோன்ற நிலையில் இருக்கும் வீரரை ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் டிராவிட் ஆகியோர் தக்கவைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரகானேவுக்கு பின்னால் சுமையை வைத்து பார்க்க அவர்கள் முயன்றுள்ளனர்.
Recommended Video

ஹர்பஜன் நம்பிக்கை
ரகானே தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து சாதித்துக் காட்டுவார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. அவர் அடுத்த சில ஆண்டுகள் இந்திய அணிகாக விளையாட வேண்டும் என்றால் சிறப்பாக பேட்டிங் செய்தே ஆக வேண்டும். அவர் ஒருவேளை சொதப்பினால், அவருக்கு பின்னால் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் என பல வீரர்கள் வரிசைக் கட்டி நிற்கின்றனர் என ஹர்பஜன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications