Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் அருமை சென்னை ஐபிஎல் ரசிகர்களே… தங்க தமிழ்தேசத்திற்கு வந்து விட்டேன்.. இது அவரோட டுவீட்

சென்னை: ஐபிஎல் போட்டியில் பங்கேற்க, தங்க தமிழ்தேசத்திற்கு வந்து விட்டேன் என்று ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்து கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டி வரும் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் கடந்த சீசன் முதற்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை அணிக்கு வந்ததில் இருந்து தமிழில் ட்விட் செய்து ரசிகர்களை அவர் உற்சாகப்படுத்தி வருகிறார்.

உற்சாகப்படுத்தும் ஹர்பஜன்

உற்சாகப்படுத்தும் ஹர்பஜன்

கடந்த சீசனில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், போட்டி முடிந்த பின்பும் சக வீரர்களை உற்சாகப்படுத்தினார். ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் ஹர்பஜன் தமிழிலும், ஆங்கிலத்திலும் ட்வீட் செய்து வந்தார்.

தமிழில் டுவிட் செய்தி

தமிழில் டுவிட் செய்தி

குறிப்பாக, பண்டிகை நாட்கள், மக்கள் பிரச்சனைகள், கஜா புயல் பாதிப்பு அனைத்தும் விவகாரங்களிலும் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்து தமது வாழ்த்துகளையும், வருத்தங்களையும் கூறி வந்தார். ஐபிஎல் போட்டிகள் நெருங்கி வருகின்றன.

தங்க தமிழ்தேசம்

இந்நிலையில், ஹர்பஜன் தமிழில் ட்விட்செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்குரிய என் அருமை சென்னை ஐபிஎல் ரசிகர்களே மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க, தங்க தமிழ் தேசத்திற்கு வந்து விட்டேன்.

ரசிகர்களே… விசில்போடு

ரசிகர்களே… விசில்போடு

ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான். அதே உணர்வு தான் என்னுள் இப்போது விசில்போடு, சிஎஸ்கே பேன்அபிஷியல் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த தமிழ் டுவிட் ஹிட் அடித்துள்ளது.

Story first published: Saturday, March 16, 2019, 18:04 [IST]
Other articles published on Mar 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+