Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்பஜன் சிங் குவியும் சல்யூட்.. ஓமனில் சிக்கித்தவித்த இந்திய பெண்.. ஹீரோவாக களமிறங்கி செய்த விஷயம்!

துபாய்: ஓமனில் சிக்கி தவித்த இந்திய பெண்னை கப்பாற்ற ஹர்பஜன் சிங் நிஜ ஹீரோவாக மாறி செய்த உதவிக்கு ரசிகர்கள் பாராட்டை குவித்து வருகின்றனர்.

Recommended Video

IND vs AFG Virat Kohli-ன் அசுரத்தனமான ஆட்டம்! அபார சதம் *Cricket

இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சாதனைகளை படைத்தவர் ஹர்பஜன் சிங்.

கடந்த 2021ம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹர்பஜன், தனிப்பட்ட வாழ்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹீரோயிசம்

ஹீரோயிசம்

இந்நிலையில் அவர் தற்போது செய்துள்ள விஷயம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பாதிண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் 21 வயதாகும் இளம் பெண் கமல்ஜீத் கவூர். வறுமையான குடும்ப சூழலை சமாளிப்பதற்காக உள்ளூரில் உள்ள ஒரு இடைதரகர் மூலமாக ஓமனில் சமையல் வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு இந்திய குடும்பத்திற்காக வேலை செய்ய வேண்டும் எனக்கூறி இடைத்தரகரும் கடந்த மாதம் அனுப்பி வைத்துவிட்டார்.

 அடித்து துன்புறுத்தல்

அடித்து துன்புறுத்தல்

ஆனால் அங்கு சென்றவுடன், 20க்கும் மேற்பட்ட இந்தியர்களை அடைத்து வைத்து கொடுமை படுத்தியுள்ளனர். கமல்ஜீத்தின் பாஸ்போர்ட் மற்றும் செல்போன்களை வாங்கிக்கொண்டு அடித்து துண்புறுத்தியுள்ளனர். இதனால் வேதனையடைந்த அவர், பெரும் சிரமங்களுக்கு பின்பு தனது தந்தையை தொடர்பு கொண்டுள்ளார். இதுகுறித்து இடைதரகரிடம் கேட்ட போது, அவர் இரண்டரை லட்சம் பணம் கொடுத்தால் மகள் திரும்ப வருவாள் எனக்கூறி பணத்தையும் பெற்றுள்ளார். ஆனால் அப்போதும் அவர் வரவில்லை.

ஹர்பஜன் நடவடிக்கை

ஹர்பஜன் நடவடிக்கை

இந்த சூழலில் தான் களத்தில் இறங்கினார் ஹர்பஜன் சிங். கமல்ஜீத்தின் உறவினர் ஒருவருக்கு ஹர்பஜன் சிங் நண்பர் என்பதால், அவருக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர், ஓமனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டார். இந்திய பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனக்கூறி, அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அடுத்து என்ன நடந்தது

அடுத்து என்ன நடந்தது

அடுத்த 3 மணி நேரங்களில் இந்திய அதிகாரிகளால் கமல்ஜீத் பத்திரமாக மீட்கப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். உதவி என்று ஒருவர் கேட்டவுடன் உடனடியாக ஹர்பஜன் களமிறங்கி செய்த விஷயம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. ஹர்பஜன் எப்போதுமே ட்விட்டரில் நாட்டிற்காக துணிச்சலுடன் கருத்துகளை பதிவிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 8, 2022, 21:18 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+