Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்பஜன் சிங் தான் என் முதல் எதிரி: ரிக்கி பாண்டிங் #ponting

மெல்போர்ன்: ஹர்பஜன் சிங் தான் தன்னுடைய முதல் எதிரி என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் அவரது சொந்த மாநிலமான டாஸ்மானியாவின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

நான் இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது எனது முதல் எதிரியே ஹர்பஜன் சிங் தான். (பஜ்ஜி பாண்டிங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 முறை அவுட்டாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.) எனக்கு தற்போதும் பஜ்ஜியை நினைத்தால் கிலியாக இருக்கும்.

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்

தற்போது கிரிக்கெட்டில் உள்ள சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. அனைத்து பேட்ஸ்மேன்களும் விளையாடுதை பார்க்கப் பிடிக்கும்.

கோஹ்லி

கோஹ்லி

விராட் கோஹ்லி மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர். அவருக்கு இன்னும் வயது உள்ளது. தான் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் உள்ளது. ஓடிஐகளில் அவர் சிறப்பாக ஆடி வருகிறார்.

கும்ப்ளே

கும்ப்ளே

கும்ப்ளே ஒரு வீரராகவும், கேப்டனாகவும் சிறந்து விளங்கியவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கிரிக்கெட் பற்றி நிறைய தெரியும். ஆனால் பயிற்சியாளராக அவர் எப்படி என்பதை வீரர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.

Story first published: Tuesday, September 6, 2016, 9:28 [IST]
Other articles published on Sep 6, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+