“அவங்க தான் கோச் ஆக இருக்கனும்” இந்தியாவுக்கு ஏன் தனித்தனி பயிற்சியாளர் தேவை.. ஹர்பஜன் பலே விளக்கம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒவ்வொரு வடிவத்திற்கும் ஏற்றார் போல தனித்தனி பயிற்சியாளர்கள் எதற்காக தேவை என முன்னாள் வீரர் ஹபஜன் சிங் கூறியுள்ளார். இதற்காக 2 பெயர்களையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் உலகக்கோப்பை கனவு இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பையிலாவது எப்படியாவது நிறைவேறிவிடும் என நினைத்த போதும் ஏமாற்றமே மிஞ்சியது.
இதனையடுத்து இந்திய அணியில் ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டிற்கும் தனித்தனி கேப்டன்கள் மற்றும் தனித்தனி பயிற்சியாளர்கள் தேவை என்ற குரல் பெரியளவில் எழ தொடங்கியது.

தனித்தனி கேப்டன்சி
ஸ்பிளிட் கேப்டன்சி பிரச்சினை பெரிதாக வெடித்ததை அடுத்து தான் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி மற்றும் டெஸ்ட் அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். டி20 அணியை ஹர்திக் பாண்ட்யா வழி நடத்தி வருகிறார். எனினும் ரோகித்திற்கு ஓய்வு தந்துள்ளதாகக்கூறி இன்னும் முழு நேர கேப்டனாக பாண்ட்யாவை அறிவிக்கவில்லை. இதன் பலனாக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்தியா நம்பர் 1 அணியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

ஹர்பஜன் விளக்கம்
இந்நிலையில் தற்போது தனித்தனி பயிற்சியாளர்களும் வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. குறிப்பாக ஹர்பஜன் சிங் அதற்கு ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 2 கேப்டன்கள் இருக்கும் போது ஏன் இரண்டு பயிற்சியாளர்கள் இருக்க கூடாது. வித்தியாசமாக யோசிக்கக்கூடியவர்கள் அணிக்குள் இருக்கலாம் அல்லவா? இங்கிலாந்தை எடுத்துக்கொள்ளுங்கள் பிரெண்டன் மெக்கல்லமை ஸ்பெஷல் பயிற்சியாளராக வைத்துள்ளனர்.

காரணம் என்ன
எனவே இந்தியாவின் டி20 அணிக்கும் விரேந்திர சேவாக், ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும். ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்திக் பாண்ட்யா கூட்டணியில் முதல் சீசனிலேயே குஜராத் ஐபிஎல் பட்டம் வென்றது. இதற்கு காரணம் டி20 கிரிக்கெட் குறித்து நன்கு அறிந்ததால் தான். எனவே டி20 கிரிக்கெட் குறித்து நன்கு தெரிந்தவரையும், அதன் தேவை என்னவென்று புரிந்துக்கொள்பவரையும் பயிற்சியாளராக கொண்டு வர வேண்டும்.

தனி திட்டங்கள்
ஒருவேளை ஆஷிஸ் நெஹ்ரா டி20 பயிற்சியாளராக வந்தால், அவரின் கவனத்தை முழுக்க முழுக்க டி20 கிரிக்கெட்டின் மீது வைத்து திட்டமிடுவார். மேலும் எப்படியாவது இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை பெற்று தர ஸ்பெஷலாக உழைப்பார். இதே போல ராகுல் டிராவிட் டெஸ்ட் மற்றும் 50 ஓவர் வடிவங்களில் எப்படி கோப்பையை வென்று தரலாம் என யோசிப்பார். இதுதான் சரியாக இருக்கும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications