Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனி பாட… நான் டான்சாட ஒரே டமாசுதான்… தமிழில் ட்வீட் செய்து அசத்திய ஹர்பஜன் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரதாரர்களின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. அதில், தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் இடம்பெற்றுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 12வது சீசன் வரும் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டிக்கெட்டுகள் தீர்ந்தன

டிக்கெட்டுகள் தீர்ந்தன

அதற்கான டிக்கெட் விற்பனையும் நடைபெற்றது. ஒரே நாளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து வருகின்றனர்.

வீரர்கள் பயிற்சி

வீரர்கள் பயிற்சி

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின் இடையே விளம்பர சூட்டிங்கிலும் கலந்து கொள்கின்றனர்.

விளம்பர படப்பிடிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரதாரர்களின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இதில், தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்றுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது.

சிஎஸ்கே வீரர்கள் முரளி விஜய், தமிழகர்களுக்கே தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஹர்பஹன் சிங், தல தோனியின் செல்லப் பிள்ளைகளில் ஒருவரான கேதர் ஜாதவ் ஆகியோர் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர். விளம்பரத்தில் ஆடியபடியும், விசிலடித்தவாறும் அவர்கள் நடித்திருக்கின்றனர்.

கலக்கல் ஹர்பஜன்

இந்த வீடியோ ஒரு பக்கம் கலக்கி வரும் நிலையில் தமிழில் டுவிட் போட்டு அசத்தும் ஹர்பஜனின் மற்றொரு டுவிட் ரசிகர்களிடையே வெகு வேகமாக பரவி வருகிறது.

ஒரே கூத்து

ஒரே கூத்து

அந்த டுவிட் செய்தியில் ஹர்பஜன் கூறியிருப்பதாவது:

வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல @msdhoni பாட்டு போட நான் @mvj888 @JadhavKedar டான்சு ஆட ஒரே டமாசு தான் போங்க. ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த @ChennaiIPL லோட ஆட்டத்த என்று கூறியிருக்கிறார்.

ஆரம்பமானது ஆட்டம்

ஆரம்பமானது ஆட்டம்

ஐபிஎல் போட்டி தொடங்கும் முன்பே... அணிகளின் வீரர்கள் ஆட்டத்தை தொடங்கி விட்டனர். ஆக மொத்தத்தில் ஒரே டமாசுதான் போங்க.

Story first published: Sunday, March 17, 2019, 14:26 [IST]
Other articles published on Mar 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+