For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 தொடர்.. இந்த இளம் வீரர்களை அனுப்புங்கள்.. ஹர்பஜன் சிங் கொடுத்த பட்டியல்

மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது அடுத்து அணியில் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து வரும் 12ஆம் தேதி தொடங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நெடுந்தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற இருக்கும் இந்த சமயத்தில் இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இன்டீஸில் விளையாடுகிறது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவ வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது. இதனால் முற்றிலும் இளம்படையை கொண்ட அணியை தேர்வு செய்ய வேண்டும் என ஹர்பஜன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

Harbhajan singh Picks 15 members squad for west indies t20 series

இது தொடர்பாக ஹர்பஜன் சிங் 15 வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார். அது யார் யார் என்று தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக கில் மற்றும் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்திருக்கிறார் இடது கை வலது கை பேட்ஸ்மெண்ட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார். மூன்றாவது வீரராக சிஎஸ்கே வின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ், நான்காவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிஷனையும் ஹர்பஜன் தேர்வு செய்திருக்கிறார்.

ஐந்தாவது வீரராக சூரியகுமார் யாதவையும், ஆறாவது வீரராக கே கே ஆர் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கையும் ஏழாவது வீரராக மும்பை இந்தியன்ஸ் திலக் வர்மாவையும் ஹர்பஜன் சிங் தேர்வு செய்திருக்கிறார். இதேபோன்று கேப்டன் ஹர்திக் பாண்டியா எட்டாவது வீரராகவும் அக்சர் பட்டேல் ரவி பிஷ்ணாய், சாகல் ஆகியோரை சுழற் பந்துவீச்சாளர்களாகவும் ஹர்பஜன்சிங் தேர்வு செய்திருக்கிறார். கூடுதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ஜித்தேஷ் சர்மாவையும் வேகப்பந்துவீச்சாளராக ஆர்ஸ்தீப் சிங் ,ஆகாஷ் மதுவால் ஹர்ஷித் ராணா ஆகியோரை ஹர்பஜன்சிங் தனது அணியில் தேர்வு செய்து இருக்கிறார்.

Story first published: Wednesday, June 14, 2023, 16:19 [IST]
Other articles published on Jun 14, 2023
English summary
Harbhajan singh Picks 15 members squad for west indies t20 series வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 தொடர்.. இந்த இளம் வீரர்களை அனுப்புங்கள்.. ஹர்பஜன் சிங் கொடுத்த பட்டியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+