For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இறுதி கட்டத்தில் கோலி, ரோகித் இருக்காங்க ஆசிய கோப்பைக்கு 2 இளம் வீரர்கள் வேண்டாம்-ஹர்பஜன் எச்சரிக்கை

மும்பை : விராட் கோலியின் ரோகித் சர்மாவும் இனி நீண்ட நாட்களுக்கு விளையாட மாட்டார்கள் என்று ஹர்பஜன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஹர்பஜன், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி மிக எளிதில் வெற்றியை பெற்று விடும் என நான் நினைத்தேன்.

ஆனால் தொடரின் முடிவு எனக்கு அதிர்ச்சியையும் கவலையும் கொடுத்திருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு தகுதி கூட பெறாத அணி நம்மை வீழ்த்தி விட்டதை நினைத்து நிச்சயம் எனக்கு வருத்தத்தை கொடுத்தது.

Harbhajan singh picks asia cup team without two young cricketers

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. இந்தியாவை பொறுத்தவரை இது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக தெரிகிறது. ரோகித் சர்மாவும் விராட் கோலி அந்த தொடரில் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவர்கள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டார்கள். இனி நீண்ட நாட்கள் அவர்கள் இந்திய அணிக்காக விளையாட மாட்டார்கள். இளம் வீரர்கள் இந்த தொடரில் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பார்கள் என நான் நம்புகிறேன்.

ஆசிய கோப்பை தொடரில் யார் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் என்னுடைய பிளேயிங் லெவனில் அவர் இருப்பார். மேலும் திலக் வர்மாவும் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற வேண்டும். சுழற் பந்துவீச்சாளராக ஜடேஜா, குல்தீப், சாகல் ஆகியோர் இடம்பெற வேண்டும். ஹர்திக் பாண்டியா மற்றும் நான்கு வேக்கப்பந்துவீச்சாளர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு வேண்டும்.

கே எல் ராகுல் கடந்த மூன்று நான்கு மாதமாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாட வில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ராகுல் தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்திருக்கிறார். உலகக் கோப்பை தொடரின் உங்களுக்கு ராகுலை பார்க்க வேண்டும் என்றால் அவரை அணியில் சேர்க்க இதுதான் சரியான நேரம் என்று ஹர்பஜன்சிங் குறிப்பிட்டுள்ளார் .ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

Story first published: Friday, August 18, 2023, 18:27 [IST]
Other articles published on Aug 18, 2023
English summary
Harbhajan singh picks asia cup team without two young cricketers இறுதி கட்டத்தில் கோலி, ரோகித் இருக்காங்க ஆசிய கோப்பைக்கு 2 இளம் வீரர்கள் வேண்டாம்-ஹர்பஜன் எச்சரிக்கை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+