For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்பா என்ன மனுஷன் யா.... ஹர்பஜனின் பெருந்தன்மை...நெகிழ்ந்த அஸ்வின் ரசிகர்கள்

அகமதாபாத்: இங்கிலாந்து தொடரில் அசத்திய அஸ்வினை நேரில் பார்த்தால் என்ன செய்வேன் என ஹர்பஜன் கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களுக்கு பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த 3வது டெஸ்ட்டில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 400 விக்கெட்களை எடுத்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்தார்.

இந்நிலையில் அவரை நேரில் பார்த்தால் லெஜண்ட் என்று தான் கூறுவேன் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

 புதிய சாதனை

புதிய சாதனை

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நடந்து முடிந்தது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் உலகில் அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 77 போட்டிகளில் அஸ்வின் ஆடி 2ம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் 72 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 கோலியின் பாராட்டு

கோலியின் பாராட்டு

போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி, அஸ்வின் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றும் அவர் தனது அணியில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வின் இந்த சாதனையை பூர்த்தி செய்தவுடன் அவரை லெஜண்ட் என்பதன் சுருக்கமாக லெஜ் என்று தான் அழைப்பேன் என்றும் கோலி தெரிவித்திருந்தார்.

உண்மையில் லெஜண்ட் தான்

உண்மையில் லெஜண்ட் தான்

இது குறித்து பேட்டியளித்துள்ள ஹர்பஜன், அஸ்வின் பல முறை இந்திய அணிக்கு வெற்றி பெற்று தந்துள்ளார். 400 விக்கெட்களை எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் 400 விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் அவர் உண்மையில் லெஜண்ட் தான். கோலி கூறியதை போல் அடுத்த முறை அஸ்வினை பார்த்தால் லெஜண்ட் என்று தான் அழைப்பேன் என தெரிவித்தார்.

அஸ்வின் ரெக்கார்ட்

அஸ்வின் ரெக்கார்ட்

சர்வதேச அளவில் இதுவரை 77 டெஸ்ட், 111 ஒரு நாள், 46 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்வின் மொத்தமாக 603 விக்கெட்களை எடுத்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களை எடுத்து 59 ரன்களை விட்டுக்கொடுத்ததே அவரின் சிறந்த பந்துவீச்சாகும். அஸ்வின் இன்னும் 11 விக்கெட்கள் எடுத்தால் டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்பஜனை முந்துவார்.

Story first published: Sunday, February 28, 2021, 15:36 [IST]
Other articles published on Feb 28, 2021
English summary
Harbhajan Singh Praises R Ashwin after 400 Test wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X