Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனா பரவும் நேரத்தில் அந்த பாக். வீரர் செய்த உதவி.. மனம் திறந்து பாராட்டிய ஹர்பஜன் சிங்!

டெல்லி : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவி உள்ளார்.

Recommended Video

சரியான நேரத்தில் உதவி செய்த அப்ரிடி... பாராட்டிய ஹர்பஜன் சிங்

அதைக் கண்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவரை மனம் திறந்து பாராட்டி உள்ளார்.

மனிதநேயம் கொண்ட உதவி என ஹர்பஜன் சிங் அப்ரிடியை பாராட்டி உள்ளார்.

கடும் பாதிப்பு

கடும் பாதிப்பு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் அந்த வைரஸ் துவங்கி உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் நிலை

இந்தியா - பாகிஸ்தான் நிலை

இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இதுவரை இந்தியாவில் 660க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழைகள் பாதிப்பு

ஏழைகள் பாதிப்பு

உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. அது மட்டுமின்றி, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், மக்கள் வெளியே பணிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. அதனால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்ரிடி உதவி

அப்ரிடி உதவி

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ஏழைகளுக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி உள்ளார் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி. இந்த நேரத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டியது நமது கடமை எனவும் அவர் கூறி இருந்தார்.

ஹர்பஜன் பாராட்டு

ஹர்பஜன் பாராட்டு

அப்ரிடி ஏழை மக்களுக்கு உதவும் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் "மனிதநேயம் கொண்ட பெரிய உதவி. கடவுள் நம்மை ஆசிர்வதிக்கட்டும். உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கட்டும். உலகின் நன்மைக்காக பிரார்த்திப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

நமது கடமை

அந்த பதிவிற்கு அப்ரிடி நன்றி கூறி உள்ளார். அதில், "பாஜி உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உலகம் ஒன்றுபட வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டியது நமது கடமை" என குறிப்பிட்டுள்ளார். ஏழைகள் துயர் குறைய வேண்டும் என்றால் கொரோனா வைரஸ் தாக்கம் விரைவில் குறைய வேண்டும்.

Story first published: Thursday, March 26, 2020, 11:14 [IST]
Other articles published on Mar 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+