Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஜினி பிறந்தநாளுக்காக ஹர்பஜன் செய்த விஷயம்.. கூறிய கவிதை படு சூப்பர்.. வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்காக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் செய்துள்ள விஷயம் இணையத்தை கலக்கி வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக கலக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனையொட்டி சமூக வலைதளங்கள் முழுவதும் நடிகர் ரஜினிகாந்திற்கான பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

வாழ்த்து மழையில் ரஜினி

வாழ்த்து மழையில் ரஜினி

திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதே போல ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஹர்பஜன் செய்த விஷயம்

ஹர்பஜன் செய்த விஷயம்

இந்நிலையில் இவற்றையெல்லாம் விட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் செய்துள்ள விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிக்காக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஹர்பஜன் சிங் தனது மார்பு பகுதியில் ரஜினியின் முகத்தை டாட்டூ குத்திக்கொண்டுள்ளார்.

வைரல் புகைப்படம்

வைரல் புகைப்படம்

இதனை பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.. மேலும் அந்த பதிவில், மாருமேல சூப்பர் ஸ்டார்" 80's பில்லாவும் நீங்கள் தான், 90's பாட்ஷாவும் நீங்கள் தான்

2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஹர்பஜன் சிங்கின் புகைப்படம் மற்றும் அந்த இன்ஸ்டா பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Superstar Rajini Birthday Special | Best of Thalaivar Styles, Punch, comedies | Filmibeat Tamil
ஹர்பஜன் சினிமா ஈர்ப்பு

ஹர்பஜன் சினிமா ஈர்ப்பு

ஹர்பஜன் சிங், தமிழ் ரசிகர்கள் மீது அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரின் போது தமிழில் பல்வேறு பதிவுகளை போட்டு பிரபலமானவர், அதன் பின்னர் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். வரும் காலங்களில் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் அவரை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, December 12, 2021, 20:00 [IST]
Other articles published on Dec 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+