அவரை ஏன் உலக கோப்பை அணியில் சேர்க்கவில்லை? பிசிசிஐயிடம் மல்லுக்கட்டும் ஹர்பஜன்
மும்பை: உலக கோப்பை அணியில் நவ்தீப் சைனிக்கு ஏன் இடம்கொடுக்க வில்லை என்று மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு அணிக்காக இந்த ஆண்டு ஆடி வரும் நவதீப் சைனி அற்புதமாக பந்துவீசி வருகிறார். உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் போன்றோர் மிகவும் மோசமாக சொதப்பும் போதும் அணிக்கு ஆறுதல் தரும் விதமாக பந்துவீசினார்.

பஞ்சாப் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 202 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி. பின்னர் பெங்களூரு பேட் செய்த போது, ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி வந்தனர். கிட்டத்தட்ட போட்டி கைவிட்டு போன நிலை.
அப்போது முக்கியமான கட்டத்தில் கே. எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரையும் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தி நம்பிக்கை தந்தார் நவதீப் சைனி. அணியின் முக்கியமான நேரத்தில் கைகொடுத்திருக்கிறார்.
அதே போல, கடைசி 18 பந்துகளில் 36 ரன்கள் தேவை இருக்க 19வது ஓவரில் அடித்து ஆடி கொண்டிருந்த நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் நவதீப் சைனி. மறுமுனையில், டேவிட் மில்லர் விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார்.
அவர் 19வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமல்லாமல், 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவரின் பந்துவீச்சை பாராட்டி இருக்கிறார் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். ஆனால், ஏன் இவரை போன்ற வேகத்தில் அசத்தும் வீரர்களை உலக கோப்பை அணிக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications