மும்பை : 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பிறகு மீண்டும் இணைந்து ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்று ஹர்பஜன் சிங் தனது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் யுவராஜ் சிங்,கம்பீர் , சேவாக்,ஜாகிர் கான் போன்ற வீரர்கள் அதன் பிறகு இணைந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வில்லை.

அதன் பிறகு நடைபெற்ற 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் உலக கோப்பையை வென்ற நான்கு வீரர்கள் மட்டும்தான் இடம்பெற்றிருந்தார்கள்.இந்த நிலையில் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு காரணம் தெரியவில்லை. எங்கள் அணியை உலகக் கோப்பையை வெல்லும் வரை தான் பயன்படுத்தினார்கள். அதன் பிறகு நாங்கள் ஒரு தொடரிலும் அல்லது ஒரு போட்டியில் கூட இணைந்து விளையாடவில்லை.
இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. இந்த முடிவு நிச்சயம் எனக்கு ஆச்சரியமாக தான். அப்போது இருந்தது இந்த விஷயம் மட்டும் தான் நான் திரும்பிச் சென்று மாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன். உலக கோப்பையை வென்ற நாங்கள் அனைவரும் மீண்டும் ஏதேனும் ஒரு போட்டியில் இணைந்து விளையாடி இருந்தால் நிச்சயம். அது மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் மீண்டும் இணையவே இல்லை.

என்னுடைய புரிதலுக்கு தாண்டி இந்த விஷயம் இருந்தது. உலகக்கோப்பை வென்ற ஒரு அணியில் எப்படி திடீரென்று அதிரடி மாற்றங்கள் நிகழும். வெற்றியைப் பெற்ற வீரர்கள் சரியில்லை என்று அனுப்பி விட்டார்களா? அந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடும்போது சில வீரர்களுக்கு இதுதான் நமக்கு கடைசி உலக கோப்பை என்று தெரியும்.
ஆனால் இன்னும் சில வீரர்கள் நிறைய ஆண்டுகள் விளையாடி இருப்பார்கள். நிச்சயம் எங்களுக்கு வயதாகி இருந்ததுதான். ஆனால் நாங்கள் இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடி இருந்திருப்போம் என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். ஹர்பஜன்சிங் கடைசியாக 2015 ஆம் ஆண்டு தான் இந்திய அணிக்காக விளையாடினார்.அதன் பிறகு ஒரு போட்டியில் கூட அவர் சேர்க்கப்படவில்லை.