இவங்க யார்னு தெரியுதா?? 23 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படத்தை பகிர்ந்த பிரபல வீரர்
மொகாலி : இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கியவர் ஹர்பஜன் சிங்.
கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், தற்போது பயிற்சியாளராக ஐ.பி.எல். அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத.
இந்த நிலையில், ஹர்பஜன் சிங் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

U-19 நாட்கள்
அதில், 1998 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்ட ஹர்பஜன் சிங், சின்ன பசங்களிலிருந்து, பெரிய ஆளுங்கலா மாறிட்டோம் என்று பதிவிட்டு இருந்தார். ஹ்ர்பஜன் சிங்கை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். ஆனால் மற்ற வீரர்கள் யார் என்று தெரியவில்லையே என புலம்பினர்.

யாரு தெரியுமா?
ஹர்பஜன் சிங் வலது பக்கம் நிற்பவர் ரோஜர் ஃபெடரரா என்று சிலர் கிண்டல் செய்தனர். கடைசியில் அவர் யார் தெரியுமா? நமது சென்னை அணிக்காக விளையாடி ரசிகர்களால் பராசக்தி என்ஸ்பிரஸ் என அழைக்கப்பட்ட இம்ரான் தாஹிர் தான். பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் தாஹிர், வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தென்னாப்பிரிக்காவிற்கு சென்று குடியேறிவிட்டார்

ஹசன் ராசா
ஹர்பஜன் சிங்கின் இடது பக்கம் நிற்பவர் பாகிஸ்தான் ரசிகர் ஹசன் ராசா என்று சிலர் கண்டுபிடித்துவிட்டனர். 1998ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற U-19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றிலேயே வெளியேறிவிட்டது. அந்த தொடரின் போது பாகிஸ்தான் விரர்களுடன் இணைந்து ஹர்பஜன் சிங் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

6 ஆண்டுகள்
இந்த தொடருக்கு பிறகு ஹர்பஜனுக்கு ஏறுமுகம் தான் அமைந்தது. அதே ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட்டில் ஹர்பஜன் சிங் பங்கேற்றார். 17 ஆண்டுகளாக இந்தியாவுக்கு விளையாடிய ஹ்ர்பஜன் சிங் டெஸ்டில் 417 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஹர்பஜன் சிங் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடவில்லை.


Click it and Unblock the Notifications