Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்பஜன் சிங் பற்றி உண்மை தெரியுமா? ஹர்பஜன் சிங்கின் தமிழ் தொடர்பு என்ன??

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் தான் நமது பஞ்சாப்பை சேர்ந்த தமிழ் பேசும் சிங்கம் ஹர்பஜன் சிங்

ஆம், ஒரு கட்டத்தில் ஹர்பஜன் சிங் தாம் ஒரு சிங் என்பதையே மறந்து தொடர்ந்து தமிழிலேயே டிவிட் செய்து வந்தார். தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு குரல் கொடுத்தார்.

அப்படி பட்ட ஹர்பஜன் சிங் இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கை

கிரிக்கெட் வாழ்க்கை

1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட்டில் ஹர்பஜன் சிங் பங்கேற்றார். 17 ஆண்டுகளாக இந்தியாவுக்கு விளையாடிய ஹர்பஜன் சிங் டெஸ்டில் 417 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஹர்பஜன் சிங் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடவில்லை.

தமிழில் டிவிட்

தமிழில் டிவிட்

ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங், 2018ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடினார். அன்று முதல் இன்று வரை ஹர்பஜன் சிங் பெரும்பாலும் தமிழிலேயே டிவிட் செய்து வந்தார். சென்னை அணி வென்றாலும் தமிழில் கொண்டாடுவார், தோற்றாலும் தமிழக ரசிகர்களுக்கு, தமிழில் ஆறுதல் கூறுவார்.

தமிழ்நாடு வாழ்க

தமிழ்நாடு வாழ்க

ஹர்பஜன் சிங் பதிவிட்ட முதல் டிவிட்டே, வணக்கம் தமிழ்நாடு..உங்க கூட இனி கிரிக்கெட் ஆடுறது ரொம்ப சந்தோசம்,உங்க மண்ணு இனி என்ன வைக்கும் சிங்கம்னு டிவிட் போட்டு ரசிகர்களை கவர்ந்தார் ஹர்பஜன் சிங்.. தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க

ஒரு இனம் கொண்டாடும்

ஒரு இனம் கொண்டாடும்

சென்னை அணி தோல்வி அடைந்த போது, இதுவும் கடந்து போகும். என்று தமிழில் ஆறுதல் சொன்ன ஹர்பஜன் சிங், என் தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது, என் வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம் என்று பஞ்ச் வசனம் எழுதி தமிழக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்

Recommended Video

அடுத்து பயிற்சியாளர் பொறுப்பு? விரைவிலேயே Retirement-ஐ அறிவிக்க போகும் Harbhajan Singh?
ஹர்பஜன் அட்மின்

ஹர்பஜன் அட்மின்

ஹர்பஜன் சிங் ரஞ்சி போட்டியில் விளையாட திண்டுக்கல் வந்த போது சரவணன் என்ற இளைஞரை சந்தித்தார். அவருடன் ஏற்பட்ட நட்பு காரணமாகவே, ஹர்பஜன் சிங் அவரை தனது தமிழ் அட்மினாக நியமித்தார். ஹர்பஜன் சிங்கின் இந்த தமிழ் பாசம் அவருக்கு கோலிவுட் சினிமா வாய்ப்பையும் பெற்று தந்தது. பிரண்ட்ஷிப், டிக்கிலோனா போன்ற படங்களில் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். ஹர்பஜன் சிங்கை இனி களத்தில் பார்க்க முடியாது என்பது வருத்தமான செய்தியாக இருந்தாலும், அவரை இனி தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கலாம்..

Story first published: Friday, December 24, 2021, 18:54 [IST]
Other articles published on Dec 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+