இந்த முறையும் பாருங்க.. என்னா அடி அடிக்கப் போறோம்னு.. துள்ளிக்குதிக்கும் ஹர்பஜன்
சென்னை: கடந்த சீசன் போன்று இந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடக்க ஆட்டம் வரும் 23ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக சிஎஸ்கே அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந் நிலையில் அந்த அணியின் வீரர் ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரில் வழக்கம் போல இம்முறையும் சிறப்பான ஆட்டத்தை பார்க்கலாம் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சுழற்பந்துவீச்சு
சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. 10 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்துவீசிய போது, வான்கடே மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இல்லை.

வெற்றிக்கு உதவினேன்
2001ல் சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினேன். சென்னை மைதானம் எனக்கு பிடித்த ஒன்று.

குவிந்த ரசிகர்கள்
பயிற்சி ஆட்டத்துக்கே 12,000 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.இத்தகைய ஆதரவை எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.

வெற்றி நிச்சயம்
ஒரே குழுவாக நாங்கள் இணைந்து ஆடுவதால் அணியின் வெற்றி சாத்தியம் ஆகிறது. அந்த ஒற்றுமையை ஒருபோதும் நாங்கள் என்றைக்குமே கைவிட்டது இல்லை.

வீரர்கள் இருக்கின்றனர்
அமைதியாகவும், அதே நேரத்தில் திறமையாகவும் விளையாடினால் வழக்கம் போல வெற்றி எங்களுக்கு தான். வெற்றியை பெறுவதற்கான வீரர்கள் அணியில் போதிய அளவு இருக்கின்றனர் என்றார் ஹர்பஜன்.


Click it and Unblock the Notifications