Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த தம்பியை டெஸ்ட் அணியில் கூப்பிட போறாங்க.. அஸ்வின், ஜடேஜாவுக்கு பயங்காட்டிய ஹர்பஜன்!

Recommended Video

Watch Video : Reason behind Ashwin not getting chance in test match?

மும்பை : துலீப் ட்ராபி தொடரில் அசத்தலாக ஆடிய இளம் வீரர் ஒருவரை இந்திய அணியில் அழைக்கப் போகிறார்கள் என ஆருடம் கூறி இருக்கிறார் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.

இந்திய டெஸ்ட் அணியில் ஏற்கனவே அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூவர் இடம் கிடைக்காமல் முட்டி, மோதிக் கொண்டு இருக்கும் நிலையில், அவர்களுக்கு பயம் காடும் வகையில் இளம் வீரர் அக்ஷய் வாக்கரேவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறி உள்ளார் ஹர்பஜன்.

அக்ஷய் வாக்கரே அசத்தல்

அக்ஷய் வாக்கரே அசத்தல்

அக்ஷய் வாக்கரே சமீபத்தில் நடந்து முடிந்த துலீப் ட்ராபி தொடரின் இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தியது யார் இந்த சுழற் பந்துவீச்சாளர் என கேட்க வைத்தது.

அறிமுகம் செய்தார்

அறிமுகம் செய்தார்

அவரை பாராட்டும் வகையிலும், இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவினர் மற்றும் ஊடகங்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கும் வகையிலும் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் அக்ஷய் வாக்கரே பற்றி பதிவிட்டு இருந்தார்.

என்ன சொன்னார்?

அந்த பதிவில், கடந்த சில வருடங்களாக பந்து வீச்சில் கலக்கி வருகிறார். முதல் தர கிரிக்கெட், ரஞ்சி ட்ராபிகளில் அடுத்தடுத்து சாம்பியனாக வலம் வருகிறார். நேற்று நடந்த இந்தியா கிரீன் அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்களுக்கு 5 விக்கெட்கள் வீழ்த்தி அற்புதமாக பந்து வீசி, தன் அணிக்கு மேலும் ஒரு சாம்பியன்ஷிப் வென்று கொடுத்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு வரும் என்று கூறி உள்ளார் ஹர்பஜன்.

அஸ்வினுக்கு இடம் இல்லை

அஸ்வினுக்கு இடம் இல்லை

இந்திய டெஸ்ட் அணியில் ஏற்கனவே அஸ்வினுக்கு இடம் இல்லாதது பெரிய விமர்சனத்தை கிளப்பி உள்ளது. ஜடேஜா அணியில் இடம் பெற்றாலும், அவரும் நிலையான வீரரா என்பது தெரியாத நிலையில் தான் ஆடி வருகிறார்.

கிலி ஏற்படுத்தி உள்ளார்

கிலி ஏற்படுத்தி உள்ளார்

குல்தீப் யாதவ் நிலை என்ன என்பது யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில், இளம் சுழற் பந்துவீச்சாளர் ஒருவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி கிலி ஏற்படுத்தி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

Story first published: Sunday, September 8, 2019, 19:35 [IST]
Other articles published on Sep 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+