Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியா செய்த மிகப் பெரிய தவறு.. தோல்வியை ஒப்பு கொண்டு விட்டனர்.. ஆனால் ஆபத்து இருக்கு - ஹர்பஜன்

மும்பை : இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி பெரிய தவறு ஒன்று செய்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கும் நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் ஒன்றாம் தேதி இந்தூரில் தொடங்குகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் இந்தூரில் நாளை தீவிரப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி குறித்து பேசிய ஹர்பஜன் சிங்,

ஆஸ்டன் ஏகார்

ஆஸ்டன் ஏகார்

ஆஸ்திரேலியா அணி பார்ப்பதற்கு கொஞ்சம் காலியாக இருப்பது போல் தெரிகிறது .அவர்கள் இடது கை சுழற் பங்கு வீச்சாளரான ஆஸ்டன் ஏகாரை விடுவித்து விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விளையாடி இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிறந்த பந்துவீச்சாளராக செயல்பட்டு இருப்பார்.

மிகப் பெரிய தவறு

மிகப் பெரிய தவறு

ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்டில் இரண்டு ஆப்ஸ்பின்னர்கள் வைத்து விளையாடியது. இது மிகப்பெரிய தவறு. ஏகார் ஒரு நல்ல திறமை வாய்ந்த வீரர். தற்போது இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நாம் சொந்த ஆடுகளத்தில் உள்ள சாதகத்தை சிறப்பாக பயன்படுத்தி விளையாடி வருகிறோம்.மூன்றாவது டெஸ்டிலும் இந்த முடிவு தான் வரும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவை விட இந்தியா பலமாக விளங்குகிறது.

ஒப்பு கொண்டனர்

ஒப்பு கொண்டனர்

ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக தாய்நாடு திரும்பி வருகின்றனர். இந்த தொடர் நான்கிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முடியும் என அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டார்கள் என நினைக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தான் எதிர்கொள்ளப் போகிறோம்.

வேறு அணியாக இருக்கும்

வேறு அணியாக இருக்கும்

அவர்கள் இப்போதில் இருந்தே அதற்காக தயாராகி விட்டார்கள் என நினைக்கிறேன். இங்கிலாந்தில் விளையாடும் போது ஆஸ்திரேலிய அணி மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் எப்படி விளையாடுவார்களோ ,அந்த வகையில் செயல்படுவார்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இங்கிலாந்து ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதில் ஆஸ்திரேலியாவின் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, February 25, 2023, 22:51 [IST]
Other articles published on Feb 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+