“பணத்தை மிச்சம் செய்ய நினைக்காதீங்க”.. தேர்வுக்கு நியமனத்தில் நடக்கும் தவறு.. ஹர்பஜன் சிங் விளாசல்!
மும்பை: பிசிசிஐ பணத்தை செலவளிக்க மிகவும் யோசிப்பதால் தான் இந்திய அணிக்கு சரியான அதிகாரிகள் கிடைக்காமல், பெரிய சிக்கல்களை சந்திப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டையே சமீபத்தில் உலுக்கிய விஷயம் சேத்தன் சர்மா வீடியோ தான். தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் பிசிசிஐ-ன் பல்வேறு ரகசியங்களை அவர் போட்டு உடைத்தார்.
விராட் கோலி - சவுரவ் கங்குலி இடையே உள்ள பிரச்சினை, வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக் கொள்வதாக பல்வேறு புகார்களை அடுக்கினார். இந்த பிரச்சினைகளுக்கு இன்றும் தீர்வு காணப்படாமல் உள்ளது.

தேர்வுக்குழு தலைவர் பணி
வீடியோ வெளியான உடனேயே இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகினார். அவரின் ராஜினாமா கடிதத்தை பார்த்த செயலாளர் ஜெய் ஷா உடனடியாக ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. எனினும் அடுத்த தேர்வுக்குழு தலைவர் யார் என்பது குறித்து இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்கான தேர்வுக்கான அறிவிப்புக்கு கூட விடவில்லை.

ஹர்பஜன் சிங் கருத்து
தேர்வுக்குழு தலைவரை தேர்வு செய்வ்தில் பிசிசிஐ தவறு செய்வதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சம்பளம் அதிகமாகும் என நினைத்துக்கொண்டு பிசிசிஐ தரமான அதிகாரிகளை நியமிக்காமல் போய்விடுகிறது. விரேந்திர சேவாக்கை தேர்வுக்குழு தலைவராக வருமாறு கேட்டால், அவர் ஏற்றுக்கொள்வார். ஆனால் அவருக்கு வழங்கும் ஊதியத்தை பற்றி யோசிக்க வேண்டும்.

ஊதியம் சரியில்லை
சேவாக் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு சம்பாதித்து வருகிறார். அவர் அதற்கு தயாராக இருக்கிறார், என்றால் தேர்வுக்குழு அதிகாரியாகவும் வருவார். எனினும் அவருக்கான ஊதியத்தை இங்கு தருவது இல்லை. இதனால் தான் ஒரு வருடம் மட்டுமே விளையாடிய வீரர்கள், உள்நாட்டு தொடர்களில் ஆடிய வீரர்கள் தேர்வுக்கு தலைவர்களாக இருக்கின்றனர். எனவே அதனை முதலில் மாற்ற வேண்டும்.

டிராவிட்டின் வேலை
ராகுல் டிராவிட் இன்று தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். அவரின் பணி இந்திய வீரர்களுடன் இருந்து தயார் செய்ய வேண்டும். அப்போது அவருக்கு ஏற்ற வீரர்களை தேர்வு செய்துக்கொடுக்கும் தேர்வுக்குழு தலைவருக்கும் பணிகள் பெரிது தான். எனவே அங்கும் நன்கு விளையாடிய ரெக்கார்ட் வைத்துள்ள வீரர்களை கொண்டு வர வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications