Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை ஓரங்கட்ட நேரம் வந்தாச்சு.. குல்தீப் யாதவ் தான் இனி எல்லாமே.. விளக்கம் சொல்லும் ஹர்பஜன்

Recommended Video

குல்தீப் யாதவ் தான் இனி எல்லாமே : ஹர்பஜன்- வீடியோ

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் இனி அஸ்வினுக்கு இடம் இல்லை என்ற பேச்சு கிளம்பி உள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் குல்தீப் யாதவ் தான் இனிமேல் பயன்படுத்தப் படுவார் என கூறினார்.

அதை தொடர்ந்து ஹர்பஜன் சிங் அந்த கருத்தை ஆதரித்து பேசியுள்ளார். அஸ்வின் வெளிநாடுகளில் சரியாக பந்து வீசுவதில்லை என கூறி இருக்கிறார் அவர். இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

அஸ்வின் காயம்

அஸ்வின் காயம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் காயம் அடைந்து தொடரில் தொடர்ந்து ஆட முடியாத நிலை ஏற்பட்டது. முதல் போட்டியில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசியும் காயத்தால் வாய்ப்பை இழந்தார்.

குல்தீப் கலக்கல்

குல்தீப் கலக்கல்

அந்த தொடரில் அஸ்வின் இல்லாத நிலையில், ஜடேஜா, குல்தீப் களமிறக்கப்பட்டனர். குல்தீப் யாதவ் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் அள்ளி ஆச்சரியம் அளித்தார். இதனால், அஸ்வின், ஜடேஜா இருவரையும் பின் தள்ளி டெஸ்ட் அணியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

வெளிநாடுகளில் அஸ்வின்

வெளிநாடுகளில் அஸ்வின்

ரவி சாஸ்திரி குல்தீப் யாதவ் தான் இனி டெஸ்ட் அணியில் நம்பர் 1 ஸ்பின்னர் என கூறிய நிலையில், ஹர்பஜன் அந்த கருத்தை ஆதரித்து பேசியுள்ளார். அவர் அஸ்வின் வெளிநாடுகளில் விக்கெட் எடுக்க திணறுகிறார் என்பதை சுட்டிக் காட்டினார்.

இங்கிலாந்து தொடர் சோகம்

இங்கிலாந்து தொடர் சோகம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் சிறப்பாக விக்கெட் எடுத்த அஸ்வின் அடுத்து வந்த போட்டிகளில் திணறினார். அதே சமயம் இங்கிலாந்தின் மொயீன் அலி அந்த போட்டியில் விக்கெட்களை அள்ளியது, அஸ்வினுக்கு பெரும் அழுத்தமாக அமைந்தது. மேலும், அந்த தொடரின் பாதியில் அஸ்வின் காயம் அடைந்தார்.

இனி குல்தீப், ஜடேஜா

இனி குல்தீப், ஜடேஜா

ஹர்பஜன் கூறுகையில், அஸ்வின் இந்தியாவில் மட்டுமே சிறப்பாக பந்து வீசுகிறார். எனவே, குல்தீப், ஜடேஜா தான் இனி இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள் என கூறினார்.

அஸ்வின் பற்றி பேசும் ஹர்பஜன்

அஸ்வின் பற்றி பேசும் ஹர்பஜன்

ஹர்பஜன் எப்போதும் அஸ்வினை குறைத்து மதிப்பிட்டு பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ஹர்பஜன் இடத்தை அஸ்வின் எடுத்துக் கொண்டார் என சிலர் இதற்கு காரணம் கூறுகிறார்கள். எது எப்படியோ, அஸ்வின் டெஸ்ட் அணியில் தன் இடத்தை தக்க வைப்பது சிரமமே!

Story first published: Thursday, February 7, 2019, 17:27 [IST]
Other articles published on Feb 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+