Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லில் அடி கொஞ்சம் ஓவரோ…!! வடிவேலு பட பாணியில் தமிழில் டுவீட் செய்த ஹர்பஜன்

சென்னை:பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற கையோடு.. ஐபிஎல்லில் அடி கொஞ்சம் ஓவரோ என்று ஹர்பஜன் தமிழில் கோலி அணியை கிண்டல் செய்திருக்கிறார்.

கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றிருக்கும் ஐபிஎல் வெற்றி கரமாக தொடங்கி இருக்கிறது. முதல் போட்டி யாருமே எதிர்பார்க்காத வேளையில் களைகட்டியது.

அதுவும் சென்னையில் சிஎஸ்கே போட்டி என்பதால் ரசிகர்கள் முதல் திரை நட்சத்திரங்கள் வரை துள்ளல்தான். உற்சாக குரல்களுக்கு இடையே போட்டிக்கு எக்கச்சக்க வரவேற்பு.

எளிதான வெற்றி

எளிதான வெற்றி

அந்த போட்டியில் 17.1 ஓவர்களில் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் நிதானமாக விளையாடிய சென்னை.. ஹாயாக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஹர்பஜன் டுவிட்

ஹர்பஜன் டுவிட்

இந்த வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் ஹர்பஜன் சிங். வழக்கம் போல ஒவ்வொரு போட்டி முடிந்தவுடன் அவர் தமிழில் டுவீட் பண்ணுவார். அது ஏக பிரபலம்.

தாறுமாறான டுவீட்

தாறுமாறான டுவீட்

இப்போது பெங்களூரு அணிக்கான போட்டி முடிந்தவுடன் அவர் ஒரு டுவீட்டை தட்டி விட்டிருக்கிறார். ரசிகர்கள் இடையே அந்த டுவீட் தாறுமாறாக பரவியிருக்கிறது.

அடி கொஞ்சம் ஓவரோ

டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB என்று கூறியிருக்கிறார்.

Story first published: Sunday, March 24, 2019, 12:21 [IST]
Other articles published on Mar 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+