Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்துல மொறப்போம், வெளில வெள்ளந்தியா சிரிப்போம்… ராஜஸ்தானுக்கு மெசேஜ் சொன்ன அந்த சென்னை வீரர்

Recommended Video

IPL 2019:Chennai vs Rajasthan | ராஜஸ்தான் அணிக்கு செய்தி சொன்ன ஹர்பஜன் சிங்- வீடியோ

சென்னை: களத்துல மொறப்போம், வெளில வெள்ளந்தியா சிரிப்போம் என்று சென்னை வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்துள்ளார்.

12வது ஐபிஎல் சீசனின் 25வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்பூரில் நடந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ராஸ்தான் ராயல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி விளையாடிய போது.. கடைசி ஓவர் த்ரில்லாக மாறியதோடு.. பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. அந்த ஓவரின் 4வது பந்து நோபாலா, இல்லையா என்று சர்ச்சை எழுந்து.. பின்னர் நோபால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

தோனியால் சர்ச்சை

தோனியால் சர்ச்சை

அதனால் கடுப்பான தோனி, மைதானத்துக்குள் வந்து நோ பாலை ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களிடம் தோனி வாதிட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மறக்க முடியாத மன்கட்

மறக்க முடியாத மன்கட்

கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் அவுட் செய்தார் பஞ்சாப் கேப்டன் அஸ்வின். ஆனால்... அந்த விவகாரம் அத்தோடு முடியவில்லை. போட்டி முடிந்தபின் வீரர்கள் கைகொடுத்துக்கொண்ட போது பட்லரும், அஸ்வினும் முறைத்து கொண்டனர்.

தமிழ் புலவர்

தமிழ் புலவர்

இதே போன்ற சம்பவம் ராஜஸ்தான், சென்னை அணி வீரர்களிடம் நிகழும் என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால்... அப்படி எல்லாம் நடக்காது என்று தமிழ் புலவர் ஹர்பஜன் சிங் தெளிவுபடுத்திவிட்டார்.

ஹர்பஜன் டுவிட்டர்

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். சிஎஸ்கே அவ்வாறு நடந்து கொள்ளாது எனும் ரீதியில் தமிழில் ட்விட் செய்துள்ளார்.அவரின் ட்விட்டில் கூறியிருப்பதாவது : " நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸுடன் விளையாட வந்திருக்கல. ஆனா அங்கேயும் ஐபிஎல்ல எங்களோட தர்பார் தான்.ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்லை சென்னை ஐபிஎல்ல தூள் கிளப்பாத இடமுமில்ல. களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெள்ளந்தியா சிரிப்போம் " என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 12, 2019, 13:30 [IST]
Other articles published on Apr 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+