Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்கிக்கொண்ட நேரமாக பார்த்து, டோணியை சீண்டும் சேவாக், ஹர்பஜன்சிங்! பழிக்கு பழி?

டெல்லி: ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவானுக்கு கேப்டன் டோணி முக்கியத்துவம் கொடுத்து தன்னை அணியில் சேர்க்காமல் புறக்கணித்தாக வீரேந்திர சேவாக்கிற்கு ஒரு வருத்தம் உண்டு. "இல்லை" என வெளியே கூறிவிட்டு ஓய்வு முடிவை அறிவித்திருந்தாலும், அனைவருக்கும் தெரிந்த உண்மை அது.

அஸ்வினுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை டோணி புறக்கணித்துவிட்டதாக ஹர்பஜன்சிங்கும் சீற்றத்தில் உள்ளார். சில நேரங்களில் டிவிட்டரில், அஸ்வின் மீது பாய்ந்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்வார் ஹர்பஜன்சிங்.

கண்ணாடி அணிந்து ஆட தொடங்கியதிலிருந்து சேவாக் சொதப்பியதும், ஹர்பஜன் பந்துகள் நாலாபுறமும் விரட்டியடிக்கப்பட்டதும்தான் வெளியேற்றத்திற்கு காரணம் என்பது ரசிகர்களுக்கு தெரியும்.

டோணிதான் டார்கெட்

டோணிதான் டார்கெட்

ஆனால், சேவாக், ஹர்பஜன் சிங் இருவரும் சேர்ந்து, இப்போது டோணியை டார்கெட் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதற்காக பகடைக் காயாக பயன்பட்டவர் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விருதிமான் சாஹா. விருதிமான் சாஹா பிறந்த நாளை பயன்படுத்திக்கொண்டு, டோணியை வாரியுள்ளனர் சேவாக்கும், ஹர்பஜனும்.

டெஸ்ட் கிரிக்கெட்

சேவாக் டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், விருதிமான் சாஹாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என கூறியதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சரியான சாய்ஸ் நீங்கள்தான் என குறிப்பிட்டுள்ளார்.

டோணி மீது விமர்சனம்

டோணி மீது விமர்சனம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோணி ஓய்வை அறிவித்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார் டோணி. இதற்காக, விமர்சனங்களையும் சந்தித்தார் டோணி. பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரில் மட்டும் டோணி ஆட சம்மதித்துள்ளார் என சில முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். இந்த நிலையில், சேவாக், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வீரர் என சாஹாவை புகழ்ந்துள்ளார்.

பெஸ்ட் விக்கெட் கீப்பராம்

இதேபோல சாஹாவை ஹர்பஜன்சிங் வாழ்த்தி வெளியிட்ட டிவிட்டில், பிறந்த நாள் வாழ்த்தை மட்டும் கூறாமல், நீதான் உலகின் பெஸ்ட் விக்கெட் கீப்பர். கடவுள் துணையிருக்கட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார் ஹர்பஜன். தற்போதைய நிலையில் உலகின் பெஸ்ட் விக்கெட் கீப்பர் என டோணி புகழப்படும் நிலையில், ஹர்பஜன் இவ்வாறு கூறி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டுள்ளார்.

எதிர்பார்த்து காத்திருப்பு

எதிர்பார்த்து காத்திருப்பு

ஆனால் ஒன்று. டோணி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பினால், இதற்காகவே காத்திருக்கும் ஹர்பஜன்சிங், சேவாக் மட்டுமல்ல, யுவராஜின் தந்தை யோக்ராஜும் கூட வம்பிழுக்கத்தான் செய்வார். டோணி ஃபார்முக்கு வருவாரா என்பதை நியூசிலாந்துக்கு எதிரான ஃபைனல் மேட்சில் பார்த்துவிடலாம்.

Story first published: Thursday, October 27, 2016, 14:57 [IST]
Other articles published on Oct 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+