For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரோஹித் சர்மா.. ஐபிஎல்-ல ஜாக்கிரதையா இருக்கணும்.. ஹர்பஜன் சிங் எச்சரிக்கை! என்னவாம்?

Recommended Video

கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஹர்பஜன் எச்சரிக்கை!- வீடியோ

கோலி, ரோஹித் சர்மா.. ஐபிஎல்-ல ஜாக்கிரதையா இருக்கணும்.. ஹர்பஜன் சிங் எச்சரிக்கை! என்னவாம்?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் காயமடையாமல் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

மே 30 முதல் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள்.

அடக்கடவுளே! இப்படியா பேசுவாங்க? தவானை சகட்டு மேனிக்கு விமர்சித்து அசிங்கப்பட்ட கம்பீர்! அடக்கடவுளே! இப்படியா பேசுவாங்க? தவானை சகட்டு மேனிக்கு விமர்சித்து அசிங்கப்பட்ட கம்பீர்!

ஐபிஎல்-இல் முக்கிய வீரர்கள்

ஐபிஎல்-இல் முக்கிய வீரர்கள்

அப்படி பங்கேற்கும் போது முக்கிய வீரர்களான கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் காயம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஹர்பஜன் கூறி உள்ளார். காரணம், இவர்கள் இல்லாமல் இந்திய அணி உலகக்கோப்பை சென்றால் அது பெரும் பின்னடைவாக அமையும்.

இந்தியா வெல்லும்

இந்தியா வெல்லும்

உலகக்கோப்பையில் இந்திய அணி வெல்லுமா என்பது குறித்து பேசும் போது ஹர்பஜன் சிங் இதை குறிப்பிட்டார். உலகக்கோப்பையில் இந்திய அணி வெல்லும் என கூறிய அவர், அதற்கான அணி இந்தியாவிடம் உள்ளது என கூறினார்.

காயம் ஏற்பட்டால்..

காயம் ஏற்பட்டால்..

ஹர்பஜன் கூறுவது போல, இந்திய அணி உலகக்கோப்பைக்கு இப்போதே தயாராகி விட்டது. ஆனால், இந்த அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், அணித் தேர்வில் இந்தியா பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும்.

ரோஹித் - தவான்

ரோஹித் - தவான்

உதாரணத்திற்கு, இந்திய அணியில் மூன்றாவது துவக்க வீரராக ராகுல் இருக்கிறார். ரோஹித் - தவான் இருவரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் இவர் மாற்று வீரராக களம் இறங்குவார். ஆனால், இவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டால் யார் இறங்குவார்கள் என்பது தெரியவில்லை.

பந்துவீச்சு பலவீனம்

பந்துவீச்சு பலவீனம்

அதே போல, பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகிய மூவரில் இரு வீரர்கள் அணியில் ஆடவில்லை என்றால், இந்தியா சிறிய அணிகளை வெல்வது கூட கடினம் என்ற நிலையே உள்ளது. அந்தளவிற்கு இவர்களை நம்பியே வேகப் பந்துவீச்சு உள்ளது. சிராஜ், கலீல் அஹ்மது, சித்தார்த் கௌல் உள்ளிட்ட எந்த பந்துவீச்சாளரும் இவர்கள் அளவிற்கு தங்களை நிரூபிக்கவில்லை.

உலகக்கோப்பை எளிதா?

உலகக்கோப்பை எளிதா?

இந்திய அணி மேற்கூறிய அத்தனை வீரர்கள் இருந்தும் அதிக அனுபவமற்ற வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில், உலகக்கோப்பை வெற்றி என்பது அத்தனை எளிதாக இருக்காது என்பதே உண்மை.

Story first published: Monday, March 11, 2019, 15:23 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
Harbhajan warns Indian players should not be Injured in IPL, ahead of World cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X