For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாபர் அசாமை பிரையன் லாரா உடன் ஒப்பிடுவதா? தொகுப்பாளரை அடிக்க பாய்ந்த ஹர்பஜன் சிங்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் நம் அண்டை நாடான பாகிஸ்தான் முதல் சுற்றிலே வெளியேறியது. சூப்பர் 8 சுற்றில் கூட தகுதி பெற முடியாத நிலையில் பாகிஸ்தான் வெளியேறியது.

அந்த அணி ரசிகர்களை மட்டுமல்லாமல் கிரிக்கெட் பிரபலங்களையும் எரிச்சல் அடைய செய்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான நிலைக்கு பாபர் அசாமின் கேப்டன்சியும் பேட்டிங் திறனும் தான் காரணம் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

t20 world cup india cricket team brian lara

பாபர் அசாம் அணியில் பிளவை ஏற்படுத்திய விட்டதாகவும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் பாபர் அசாம், பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களின் ஒருவராக கருதப்படுகிறார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் 3800 ரன்கள் அடித்திருக்கும் பாபர் அசாம் சராசரியாக 45 வைத்திருக்கிறார். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் பாபர் அசாம் 5700 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் அவருடைய சராசரி 56 என்ற அளவில் இருக்கிறது. இதேபோன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4,100 ரன்களுக்கு மேல் பாபர் அசாம் அடித்துள்ளார். இதில் அவருடைய சராசரி 41 என்ற நிலையில் இருக்கின்றது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தற்போது இரண்டு விஷயங்களை கூறி இதில் எது பிடிக்கும் என்று கேள்வி கேட்கப்படுகிறது.

திரைப்படம், அரசியல், விளையாட்டு என பல்வேறு தலைப்புகளில் இந்த கேள்விகள் கேட்கப்படுகிறது. இதே போன்று கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்கிடம் இரண்டு வீரர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டு, அதில் உங்களுக்கு யார் பிடிக்கும் என கேட்கப்பட்டது. அப்போது பிரையன் லாரா சிறந்தவரா இல்லை குமாரசங்ககாரா சிறந்தவரா என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஹர்பஜன்சிங் பிரையன் லாரா என்று பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து பிரையன் லாரா சிறந்தவரா இல்லை பாபர் அசாம் சிறந்தவரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டவுடன் ஹர்பஜன் சிங் டென்ஷன் ஆகிவிட்டார். உடனே எழுந்து நின்று கீழே இருந்து ஏதோ பொருளை எடுத்து அடிப்பது போல் செய்தார். பின் சுதாரித்துக் கொண்ட ஹர்பஜன்சிங் அதை காமெடியாக மாற்றுகிறேன் என அங்கு இருந்த பழங்களை எடுத்து தொகுப்பாளரிடம் கொடுத்து உங்களுக்கு சிறந்த அறிவு இருக்கிறது என்று கூறினார்.

ஹர்பஜன் சிங்கின் இந்த செயல் பாகிஸ்தான் ரசிகர்களை வேதனை அடைய செய்தது. இந்த நிலையில் பாபர் அசாமை பிரையன் லாராவுடன் ஒப்பிடுவது சரி கிடையாது என்றும் பல ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 ஆயிரத்து 953 ரன்கள் அடித்திருக்கும் பிரையன் லாரா 34 சதங்கள் அடித்துள்ளார்.

இதேபோன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து உலக சாதனையை பிரையன் லாரா படைத்திருக்கிறார். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் 19 சதங்கள் அடித்துள்ள பிரையன் லாரா 1045 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 10405 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 2, 2024, 10:11 [IST]
Other articles published on Jul 2, 2024
English summary
Harbhajan singh was furious after the question was raised on by comparing Brian Lara to babar azam பாபர் அசாமை பிரையன் லாரா உடன் ஒப்பிடுவதா? தொகுப்பாளரை அடிக்க பாய்ந்த ஹர்பஜன் சிங்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+