ஹர்பஜனை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்... ரூ.2 கோடிக்கு ஏலம்!
சென்னை : இந்திய அணியின் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய்க்கு கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
முதல் கட்ட ஏலத்தில் ஹர்பஜன் ஏலத்தில் எடுக்கப்படாத நிலையில் அடுத்ததாக அவர், அவரது ஆதார விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய சிறப்பான அணிகளுக்காக ஹர்பஜன் சிங் இதுவரை விளையாடியுள்ளார்.
ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் சென்னையில் நடைபெற்றுவரும் நிலையில், இதில் 292 வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஏலத்திற்காக முன்னதாக சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் இந்த ஏலத்தில் பங்கேற்றார். அவரது ஆதாரவிலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல் கட்டமாக நடைபெற்ற ஏலத்தில் ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அவர் ஐபிஎல்லில் இதுவரை மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள நிலையில் தற்போது கேகேஆர் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications