Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்

சென்னை: தமிழர்களின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கி விட்டேன் என்று சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் உருக்கமாக கூறி இருக்கிறார்.

2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வீழ்த்தியது.

அந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன் சிங் 4 ஓவர்கள் வீசி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். மகிழ்ச்சியில் அவர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹர்பஜன் ட்வீட்

ஹர்பஜன் ட்வீட்

ஹர்பஜன் சிங், சென்னை அணிக்கு வந்ததில் இருந்து தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தம்மை தமிழ் புலவர் என்றும் அடிக்கடி கூறிக் கொள்வார்.

வாழ்த்தும் ஹர்பஜன்

வாழ்த்தும் ஹர்பஜன்

தீபாவளி, தமிழர் திருநாள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், கஜா புயல் பாதிப்பு என தமிழில் ட்வீட் செய்து தனது வாழ்த்துகளையும், வருத்தங்களையும் தெரிவித்து வந்தார். சிஎஸ்கே அணிக்கு வந்ததில் இருந்தே தமிழில் ட்வீட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

டுவிட்டர் பதிவு

டுவிட்டர் பதிவு

அந்த வகையில் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் ஜெர்சி நம்பர் 27. இன்றைய சென்னை ஐபிஎல் ஸ்பெல் 4-0-20-3=27, என் குழந்தை ஹீனாயா பிறந்த நாள் 27.

தமிழன் ஆசி

இவையாவும் தற்செயல். ஆனா நான் சம்பாதிச்ச உங்களோட அன்பும் ஆதரவும் இதுபோன்ற தற்செயலையும் தாண்டிய மாறா நிரந்தரம்.வெகு நாட்கள் கழித்து தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று! என்று தெரிவித்து உள்ளார். அவரின் இந்தப் பதிவு ட்விட்டரில் கன்னாபின்னாவென்று வைரலாகி வருகிறது.

Story first published: Sunday, March 24, 2019, 18:37 [IST]
Other articles published on Mar 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+