Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'சென்னையில இது வேலைக்கே ஆகாது' - விராட் கோலி முடிவுக்கு ஹர்பஜன் மறுப்பு

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது ஆச்சரியமாக உள்ளது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று (பிப்.5) தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து, இந்திய பவுலர்களை ரொம்பவே சோதித்து வருகிறது.

கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சிப்லே 87 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் சேர்க்க 500 ரன்களை கடந்துவிட்டது இங்கிலாந்து. பும்ரா, அஷ்வின், நதீம், இஷாந்த் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

 ஆச்சரியமாக உள்ளது

ஆச்சரியமாக உள்ளது

இந்நிலையில், தேர்வு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், அணியில் இருந்தும் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அக்ஷர் படேலுக்கு காயம் ஏற்பட்டதால், ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டார் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால், சென்னையில் இரு ஆஃப் ஸ்பின்னர்களை கொண்டு விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

 ஏற்றுக் கொள்ள முடியாது

ஏற்றுக் கொள்ள முடியாது

குல்தீப் சேர்க்கப்பட்டிருந்தால், அணியின் பந்துவீச்சு தாக்குதலில் வெரைட்டி கிடைத்திருக்கும். குல்தீப், தான் விளையாடிய கடைசி இரு டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஆகையால், அவரை புறக்கணித்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

 கான்ஃபிடன்ஸ் போயிடும்

கான்ஃபிடன்ஸ் போயிடும்

இது அவரது நம்பிக்கையை அதிகரிப்பதற்கான நல்ல அறிகுறி அல்ல. ஏனெனில், அணியில் தொடர்ந்து நீடித்தும், உங்களால் பிளேயிங் லெவனுக்குள் இடம்பிடிக்க முடியவே இல்லை எனில், அது உங்களை மனச்சோர்வடைய வைத்துவிடும் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

 மூச்சு விட்ட பவுலர்கள்

மூச்சு விட்ட பவுலர்கள்

ஒருவழியாக, கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் எடுத்து அவுட்டானார். இந்திய பவுலர்கள் இப்போது தான் மூச்சு விடத் துவங்கியுள்ளனர். எனினும், இங்கிலாந்து தற்போது 500 ரன்களை கடந்துவிட்டது.

Story first published: Saturday, February 6, 2021, 17:32 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+