பெங்களூரை பங்கம் செய்த ஹர்பஜன்.. முதல்ல கோலி.. அப்புறம் மொயின் அலி, டி வில்லியர்ஸ்
சென்னை:சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூர் அணியை தமது சுழற்பந்து வீச்சில் சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் திணறடித்தார்.
ஐபிஎல் முதல் போட்டியில் தோனியின் சென்னையும், கோலியின் பெங்களூரு அணியும் மோதின. டாசில் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.
தொடக்க வீரர்களாக கேப்டன் கோலியும், பார்த்தீவ் படேலும் களமிறங்கினர். மிக அற்புதமான பந்துவீசிய ஹர்பஜன் சிங், இந்த ஐபிஎல் தொடரின் முதல் விக்கெட்டாக கோலியை சாய்த்தார். கோலி வெறும் 6 ரன்களில் வீழ்ந்தார்.

9 முறை அவுட்
ஸ்பின் பவுலிங்கில் தொடர்ந்து தான் தடுமாறுவதை இந்த முறையும் நிரூபித்தார் கோலி. ஐபிஎல் தொடரில் மட்டும் மொத்தம் 9 முறை ஸ்பின் பந்தில் நடையை கட்டியிருக்கிறார்.

47 பந்துகளில் 2 விக்கெட்டுகள்
ஆனால்... ஹர்பஜனோ.. பவர்பிளேவில் தடுமாறுவார். அவர் கடந்த சீசனில் 47 பந்துகளில் இரண்டே இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். அதிலும் குறிப்பாக கடந்த மூன்று 20 ஓவர் போட்டிகளில் மொத்தம் அவர் பந்துவீச்சு படுமோசம்.

மாயாஜால பந்துவீச்சு
அதற்கு மாறாக இம்முறை கோலியை சாய்த்த பின்னரும் தமது மாயாஜால பந்துவீச்சை தொடர்ந்தார் ஹர்பஜன். மொயின் அலி, டி வில்லியர்ஸ் என முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து அதிர்ச்சி கொடுத்தார்.

சரிந்த பெங்களூரு
இந்த ஆட்டத்தில் ஹர்பஜனின் பந்துவீச்சில் பல முன்னேற்றங்களை காண முடிந்தது. ஆர்சிபி அணியின் சரிவையும் அவர் தொடக்கி வைத்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications