கமண்டரி பண்ண சொன்னா பாங்க்ரா டான்ஸ் கத்துக் கொடுக்கும் ஹர்பஜன்..
லண்டன் : நேற்று இந்தியா, இங்கிலாந்து ஆடிய ஐந்தாம் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த டெஸ்ட் தொடருக்கு வர்ணனையாளராக இருக்கும் ஹர்பஜன், தன் சக வர்ணனையாளருக்கு பஞ்சாபின் பாங்க்ரா நடனத்தை கற்றுக் கொடுத்தார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது, அதற்கான இந்திய வர்ணனையாளர்கள் குழுவில் குறைந்த அளவிலான இந்திய முன்னாள் வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.
அதில் ஒருவராக நம் ஹர்பஜனும் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன் அதிகம் வர்ணனை செய்து பழக்கமில்லாத ஹர்பஜன், இங்கிலாந்தில் தன் வேலையை இதுவரை சிறப்பாகவே செய்து வருகிறார். சில சமயம் சர்ச்சையை கிளப்பும் விஷயங்களையும் பேசுவதால், அவரது பேச்சுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.
பாங்க்ரா ட்வீட்
ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட ட்வீட்டில், ஹர்பஜன் உதவியோடு, பிரபலமான இங்கிலாந்து வர்ணனையாளர் டேவிட் பம்பில் லாயிட் பாங்க்ரா நடனம் ஆடினார்" என குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்தது.

கற்றுத் தந்த ஹர்பஜன்
அதில் டேவிட் முதலில் தவறான முறையில் பாங்க்ரா நடனம் ஆட முயற்சி செய்தார். பின் ஹர்பஜன் கைகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என அவருக்கு பாடமெடுத்தார்.

இனி கிரிக்கெட் ஆட வாய்ப்பில்லை
தேசிய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கும் ஹர்பஜன், கிட்டத்தட்ட ஓய்வை அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல்-இல் ஆடினார். அடுத்த ஆண்டும் ஆடுவார் என கூறப்படுகிறது. இதை தவிர்த்து கிரிக்கெட் ஆடும் வாய்ப்புகள் அவருக்கு குறைவு.

ஹர்பஜனின் கருத்துக்கள்
ஹர்பஜன் எதையும் யோசிக்காமல் சில சர்ச்சையான கருத்துக்களை பேசுகிறார். அது நன்றாக வேலை செய்கிறது. சமீபத்தில் கூட அஸ்வின் மீது குற்றம் சாட்டியது, மாயன்க் அகர்வாலை ஏன் ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை என அவரது கருத்துக்கள் செய்திகளில் தினமும் இடம் பிடித்து வருகிறது.
தற்போது, வர்ணனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்பஜன், இனி வர்ணனையாளராக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications