Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுமாராக ஆடும் வெ.இண்டீஸை கேலி செய்த ஹர்பஜன்.. நெத்தியடி பதில் அளித்த வெ.இண்டீஸ் வீரர்

Recommended Video

வெ.இண்டீஸை கேலி செய்த ஹர்பஜன்... வெ.இண்டீஸ் வீரரின் பதில் என்ன ?- வீடியோ

மும்பை : இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக பரிதாபமாக ஆடியது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கோட்டை விட்டது.

இதை சுட்டிக் காட்டி ட்விட்டரில் கேலி செய்தார் ஹர்பஜன். ஹர்பஜன் இப்படி கேலி செய்து பேசியதை இந்திய ரசிகர்களே விரும்பவில்லை.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டினோ பெஸ்ட் ஹர்பஜனுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

எளிதான வெஸ்ட் இண்டீஸ்

எளிதான வெஸ்ட் இண்டீஸ்

பிசிசிஐ இங்கிலாந்தில் இந்தியா டெஸ்ட் தொடரில் படு மோசமான தோல்விகளை சந்தித்துக் கொண்டு இருந்த போது அவசர அவசரமாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ஏற்பாடுகள் செய்தது. மிகவும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் டெஸ்டில் பேட்டிங், பந்துவீச்சு என எந்த பக்கமும் விடாமல் துவைத்து காயப் போட்டனர் இந்திய வீரர்கள்.

ஹர்பஜன் நக்கல் ட்வீட்

இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை செய்தது. போட்டியின் போது பரிதாபமாக செயல்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை குறிப்பிட்ட ஹர்பஜன். "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு கேள்வி... வெஸ்ட் இண்டீஸ் அணி ரஞ்சி தொடரின் ப்ளேட் குரூப் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெறுமா? எலைட் பிரிவில் ஆட முடியாதே.." என நக்கலாக ஒரு ட்வீட் போட்டார்.

வெ.இண்டீஸ் ப்ளேட் குரூப் அணியா?

வெ.இண்டீஸ் ப்ளேட் குரூப் அணியா?

இந்தியாவின் உள்ளூர் தொடரான ரஞ்சி தொடரில் ப்ளேட் குரூப் எனப்படுவது மிகவும் பின்தங்கிய, புதிதாக இணைக்கப்பட்ட மாநில அணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்த கத்துக்குட்டி அணிகளோடு ஒப்பிட்டு பேசியுள்ளார் ஹர்பஜன். ஆனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை வரவேற்கவில்லை.

டினோ பெஸ்ட் பதிலடி

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் டினோ பெஸ்ட், ஹர்பஜனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். "இது மாதிரி துடுக்குத்தனமான ட்வீட்களை இங்கிலாந்து தொடரில் பார்க்கவில்லையே... எப்படியோ.. எங்கள் இளம் வீரர்கள் கற்றுக்கொள்வார்கள்.." என கூறியுள்ளார். இங்கிலாந்தில் இந்திய அணி 4-1 என டெஸ்ட் தொடரை படு மோசமாக இழந்தது குறிப்பிடத்தக்கது. .

Story first published: Friday, April 17, 2020, 21:24 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+