
இங்கிலாந்து வீரர்கள்
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஜூன் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்- ல் பங்கேற்றால் கொரோனா தனிமைப்படுத்துதல் காரணமாக டெஸ்ட் போட்டியில் ஆட முடியாமல் போகும்.

வீரர்களுக்கு அழுத்தம்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் உள்ளிட்ட பலர் இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் தொடர் தான் இருப்பதிலேயே மிக முக்கியமானது எனவே ஐபிஎல்-ல் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க கூடாது என தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொகை
இது குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, சில வீரர்களுக்கு டெஸ்ட் தொடர் பிடிக்கும், சில வீரர்களுக்கு டி20 போட்டி பிடிக்கும், எனவே அவர்களை இதைதான் செய்யவேண்டும் என நிர்பந்திக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஏலம்
ஐபிஎல்-ல் மூலம் கிடைக்கும் பெரும் தொகையை யாராலும் மறுக்கவும் முடியாது. கிறிஸ் மோரிஸ், கெயில் ஜேமிசன் போன்ற வீரர்களுக்கு அதனை மறுப்பது கடினம். எனவே இதற்கு தான் நீங்கள் முக்கியம் தரவேண்டும் என கிடையாது. வீரர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications