Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடுமையான உழைப்பாளி, அதிகமான திறமை இருக்கு... வேறென்ன வேணும்... ரஷீத் கான் பாராட்டு யாருக்கு?

Hard working and Skilful -Rashid Khan on Natarajan
சிட்னி : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்துள்ளது. ஆனால் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த இரு தொடர்களிலும் யார்க்கர் கிங் நடராஜனின் பங்கு அதிகமாக காணப்படுகிறது. இரு தொடர்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் அவர் கடுமையான உழைப்பாளி என்றும் திறமையானவர் என்றும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் புகழ்ந்துள்ளார்.

Hard working and Skilful -Rashid Khan on Natarajan

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் ஐபிஎல் 2020 தொடரில் சிறப்பான பங்களிப்பை தன்னுடைய அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு அளித்துள்ளார். மேலும் பிபிஎல் உள்ளிட்ட போட்டிகளிலும் இவரது பங்களிப்பு அதிகமாக உள்ளது. தன்னுடைய அணியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் சிறப்பான வீரராக போற்றப்படுகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் நடராஜன் குறித்து டிவிட்டரின் கேள்வி பதில் நிகழ்வில் பேசிய ரஷீத் கான் அவர் கடுமையான உழைப்பாளி மற்றும் அதிகமான திறமைகளை கொண்டுள்ளதாக புகழ்ந்துள்ளார். இதேபோல ஹர்திக் பாண்டியா அமைதியானவர் ஆனால் சிறப்பாக அடித்து ஆடக்கூடியவர் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, December 7, 2020, 11:19 [IST]
Other articles published on Dec 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+