Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை டீம்மில் சேர்க்காதீங்க – ஹர்திக் கோரிக்கை..காரணம் என்ன?

அனைத்து வீரர்களும் என்னை அணியில் சேருங்கள்.. என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்டு பார்த்திருப்போம்.. ஆனால் அணியில் இல்லாத போது என்னை தேர்வு செய்யாதீங்க ப்ளிஸ் என்று இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா வினோத கோரிக்கை வைத்துள்ளார்.

Recommended Video

Hardik Pandiya bizzare request to selectors for SA Tour | OneIndia Tamil

இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக விளங்கி வந்தவர் ஹர்திக் பாண்டியா.. கபில் தேவ்க்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த குறிஞ்சி மலர் ஹர்திக் பாண்டியா என கிரிக்கெட் விமர்சகர்கள் போற்றி வந்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி என இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக ஹர்திக் பாண்டியா இருந்தார்

 அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

பேட்டிங்கில் தனி ஆளாக நின்று ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர் ஹர்திக் பாண்டியா.ஆனால் கடந்த சில நாட்களாக ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதை தவிர்த்து வந்தார். கடந்த ஒரு ஆண்டாக பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால் தான் அவர் பந்துவீசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்பட்டது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அணியில் இடமில்லை

அணியில் இடமில்லை

அறுவை சிகிச்சை மேற்கொண்டும் ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் நடப்பு ஐ.பி.எல், தொடரிலும் அவர் பந்துவீசவில்லை. டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் பந்துவீச தொடங்கினாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் நியூசிலாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யவில்லை

வினோத கோரிக்கை

வினோத கோரிக்கை

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய பி.சி,சி.ஐ., தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து பயிற்சிகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. தென்னாப்பிரிக்கா தொடருக்குள் ஹர்திக் பாண்டியா தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்கு காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்றும், தற்போது பந்துவீச்சில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். தாம் முழு உடல் தகுதியை எட்டும் வரை தன்னை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டாம் என்று ஹர்திக் பாண்டியா கேட்டுகொண்டுள்ளார்.

நியாயம்

நியாயம்

ஹர்திக் பாண்டியாவின் இந்த கோரிக்கை வினோதமாக இருந்தாலும், அவரது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டராக தான் அணியில் சேர்க்க வேண்டுமே தவிர ஒரு பேட்ஸ்மேனாக சேர்க்க தேவையில்லை என்று விமர்சகர்கள் கூயுள்ளனர். ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் வெங்கடேஷ் ஐயர் அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, November 28, 2021, 17:21 [IST]
Other articles published on Nov 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+