என்ன**** பண்ணிட்டிருந்த? தமிழக வீரரை கெட்ட வார்த்தையால் திட்டிய ஹர்திக் பாண்ட்யா..களத்தில் பரபரப்பு
கொல்கத்தா: இலங்கை அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தரை, துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கெட்ட வார்த்தைகளால் திட்டிய வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சரிந்தது.

எளிய இலக்கு
ஓப்பனிங் வீரர் அவிஷிங்கா ஃபெர்னாண்டோ 20 ரன்களுக்கு வெளியேற அதன் பிறகு ஜோடி சேர்ந்த நுவனிடு ஃபெர்னாண்டோ (50) மற்றும் குசல் மெண்டீஸ் (34) ஆகியோர் சீரான வேகத்தில் ரன் குவித்தனர். எனினும் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதனால் 103 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் வந்த அனைத்து வீரர்களும் தடுமாற, 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்குள் சுருண்டது.

பாண்ட்யாவின் செயல்பாடு
இந்நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா செய்த ஒரு விஷயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இலங்கை இன்னிங்ஸின் போது 11வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவர் முடிந்த பிறகு களத்திற்குள் வந்த சப்ஸ்டிட்யூட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அனைவருக்கும் தண்ணீர் கொடுத்துக்கொண்டிருந்தார்.

மோசமான வார்த்தை
அப்போது வாஷிங்டன் சுந்தரிடம் கடும் கோபமடைந்த ஹர்திக் பாண்ட்யா, நான் கடந்த ஓவரின் போது தண்ணீர் கேட்டேன், இப்போது தான் கொண்டு வருகிறாய், அப்போதெல்லாம் என்ன **** வேலையை செய்துக்கொண்டிருந்தாய் என கெட்ட வார்த்தையிலேயே திட்டினார். இதுகுறித்த ஆடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

தொடரும் குற்றச்சாட்டுகள்
ஹர்திக் பாண்ட்யா கோபப்பட்டால் மிக மோசமாக நடந்துக்கொள்வதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கடந்த ஐபிஎல்-ன் போது கூட சீனியர் வீரர் முகமது ஷமியை அனைவரின் முன்னிலையிலும் மோசமாக திட்டியிருந்தார். இதுகுறித்த காட்சிகள் வெளியாகி பேசுப்பொருளானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications