எதிர்பார்த்த 2 விஷயமும் இல்லை.. 3வது டி20ல் ஹர்திக் பாண்ட்யா எடுத்த மெகா ரிஸ்க்.. கவலையில் ரசிகர்கள்
ராஜ்கோட்: இலங்கை அணியுடனான 3வது டி20 போட்டியிலும் இந்திய அணியை ஆபத்தான குழிக்குள் தள்ளிவிட்டுள்ளார் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா. இதனால் வெற்றி பெறுமா என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
இரு அணிகளும் மோதும் இந்த 3வது டி20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ள சூழலில் இன்று தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும்.
இப்படிபட்ட முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் எதிர்பார்த்த 2 முக்கிய விஷயங்களையுமே அவர் செய்யவில்லை.

டாஸில் முடிவு
ராஜ்கோட் மைதானத்தை பொறுத்தவரையில் பிட்சானது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒன்றாகும். இதே போல சுழற்பந்துவீச்சாளர்களும் தாக்கம் ஏற்படுத்தலாம். இங்கு பேட்டிங் களமாக இருப்பதாலும், பனிப்பொழிவு இருக்கும் என்பதாலும் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங் செய்து தான் வெற்றி கண்டுள்ளன. ஆனால் இந்த சூழலிலும் நான் ரிஸ்க் எடுப்பேன் என்ற வகையில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

காரணம் என்ன
இந்திய அணியை கடினமான சூழல்களில் தள்ளி அனுபவம் பெற வைக்க வேண்டும். அப்போது தான் பெரிய போட்டிகளில் எந்த முடிவையும் சமாளிக்க முடியும் எனக்கூறியிருந்தார். ஆனால் வெற்றி பெற்றே தீர வேண்டிய இந்த போட்டியிலும் அந்த ரிஸ்க்-ஐ எடுப்பதா என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

2வது தவறு
இதே போல மற்றொரு ரிஸ்க்-ம் உள்ளது. இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 2 போட்டிகளிலுமேயே மிக மோசமாக சொதப்பினார். அவருக்கு மாற்றாக பெஞ்சில் அமர்ந்துள்ள ருதுராஜ் கெயிக்வாட் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் பாண்ட்யா செய்யவில்லை. 2வது போட்டியில் நோ பால்-களாக வீசி தள்ளிய அர்ஷ்தீப் சிங்கிற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பழைய அணியுடனேயே களமிறங்கியுள்ளார்.

ஸ்பின்னர் கிடையாது
ராஜ்கோட் மைதானத்தில் ஸ்பின்னர்கள் சாதிப்பார்கள் என்பதால் ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைத்துவிட்டு, வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் ஹர்திக் பாண்ட்யா பழைய 2 ஸ்பின்னர்களுடனேயே சென்றுள்ளார். 3வது ஸ்பின்னர் தேவைப்பட்டால் தீபக் ஹூடா களமிறங்குவார் எனத்தெரிகிறது.


Click it and Unblock the Notifications