தலைகீழாக தான் குதிப்பேன்..2வது டி20-யில் வேண்டுமென்றே ரிஸ்க்எடுத்த ஹர்திக் பாண்ட்யா..ரசிகர்கள் கோபம்
புனே: இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடி மாற்றம் செய்ததோடு, ரிஸ்கான முடிவையும் எடுத்துள்ளதால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த 2வது போட்டி புனேவில் உள்ள கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஏற்கனவே 1 - 0 என முன்னிலை வகிக்கும் சூழலில் தொடரை கைப்பற்றும் நோக்கத்தோடு இன்று களமிறங்குகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார். இங்கு பந்துவீச்சை தேர்வு செய்வதே மிகவும் ரிஸ்க்கான முடிவாகும்.

பிட்ச் நிலைமை
புனே பிட்ச்-ஐ பொறுத்தவரையில் பேட்ஸ்மேன்களுக்கு நல்ல சாதகமான களமாகும். இங்கு வேகப்பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களின் போது சாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
எனவே முதலில் பேட்டிங் செய்யும் அணி முடிந்தவரை அதிக ரன்களை குவித்துவிட்டால், 2வது பேட்டிங் செய்யும் அணி சற்று சறுக்கும். இங்கு இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி கண்டுள்ளன.

பாண்ட்யாவின் ரிஸ்க்
இந்நிலையில் இதனையெல்லாம் பொருட்படுத்தாத ஹர்திக் பாண்ட்யா, டாஸ் வென்ற போதும் பந்துவீச்சை தேர்வு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், நேரம் போக போக பனிப்பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். பேட்டிங் செய்யும் அணிக்கு தான் சாதகம் என எனக்கு தெரியும். ஆனால் நான் தெரிந்தே தான் இந்த முடிவை எடுத்தேன் எனக்கூறியுள்ளார். இரு அணிகளும் இதற்கு முன்பு இங்கு மோதிய போட்டியில் இந்தியா 200 ரன்களுக்கு மேல் அடித்தது. மேலும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

ப்ளேயிங் 11 மாற்றங்கள்
இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ பொறுத்தவரையில் சீனியர் வீரர் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு மாற்றாக ராகுல் திரிபாதி அறிமுகமாகியுள்ளார். ஐபிஎல்-ல் நல்ல அனுபவம் உள்ள இவர், இன்று கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல கடந்த போட்டியில் சொதப்பிய ஹர்ஷல் பட்டேலுக்கு மாற்றாக அர்ஷ்தீப் சிங் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்.

ப்ளேயிங் 11 விவரம்
சுப்மன் கில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, யுவேந்திர சாஹல்


Click it and Unblock the Notifications