மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை விட்டு பிரிந்தார். இருவரும் சேர்ந்து தாங்கள் இனி பிரிவதாக அறிவித்தனர். அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து நடைமுறைகளை செய்ய உள்ளனர்.
இந்த நிலையில், ஆனந்த் அம்பானி திருமண விழாவில் ஹர்திக் பாண்டியா ஒரு பாலிவுட் நடிகையுடன் நெருக்கமாக சுற்றியதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்ததாக அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் அவரை விட்டுப் பிரிந்து சென்றார். அவரது மகன் அகஸ்தியாவையும் அழைத்துக் கொண்டு, தனது சொந்த நாடான செர்பியாவுக்கு சென்று விட்டார்.

அதனால், ஹர்திக் பாண்டியா சோகத்தில் இருப்பார் என நினைத்த நிலையில் அவர் அம்பானியின் குடும்ப விழாவில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்தார். அவர் சோகத்தை மறக்கவே இவ்வாறு செய்கிறார் என ரசிகர்கள் நினைத்தனர். இந்த நிலையில் தான் அவர் பாலிவுட் நடிகை ஒருவருடன் அங்கு நெருக்கமாக சுற்றித் திரிந்தது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அம்பானி குடும்பத்தின் பிரம்மாண்டமான திருமண விழாவில் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அங்கே அவர்கள் தொடர்ந்து நடனமாடிக் கொண்டே இருந்தனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா பல பிரபலங்களுடன் நடனமாடிக் கொண்டிருந்த வீடியோக்கள் வெளியாகின.
இந்த நிலையில், அவர் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே உடன் இரண்டு நாட்களும் சுற்றிச் திரிந்ததாகவும், இருவரும் ஒன்றாகவே காணப்பட்டதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. அந்த திருமணத்தில் வேலை செய்த பணியாளர்களிடம் இருந்து இந்த தகவல்களை பெற்றதாகக் கூறி நேஹா என்ற பெண் இணையத்தில் வெளியிட்டு இருக்கும் வதந்திகள் வேகமாக பரவி வருகிறது.
அதிலும் ஹர்திக் பாண்டியா - அனன்யா பாண்டே குறித்து அதிர வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஹர்திக் பாண்டியா - அனன்யா பாண்டே இருவரும் பல்வேறு சமயங்களில் ஒன்றாக நடனமாடும் வீடியோக்களை ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.