Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் வேலையை காட்டிய ஹர்திக் பாண்டியா.. புதிய காதலி ஜஸ்மீன் வாலியாவுடன் பிரேக் அப்! என்ன நடந்தது?

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் இங்கிலாந்து மாடல் நடிகையான ஜஸ்மீன் வாலியா இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதல் உறவில் இருந்து வந்தனர். தற்போது இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரை ஒருவரை பின் தொடரவதை நிறுத்தி இருக்கின்றனர்.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவரும் மாடல் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு ஓராண்டுக்கு முன்பாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் திருமணம் முடிந்த 2 மாதங்களிலேயே ஆண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.

Hardik Pandya Jasmin Walia

இவர்கள் இருவரும் 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி விவாகரத்து நடைபெற்றது. விவாகரத்துக்கு முன்பாகவே ஹர்திக் பாண்டியா இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் நடிகையான ஜஸ்மீன் வாலியா என்பவருடன் காதல் உறவில் இருந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போதே ஜஸ்மீன் வாலியா மும்பை வந்திருந்தார்.

இதன்பின் ஜஸ்மீன் வாலியாவுடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றி வந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியுடன் பயணிக்கும் போது அழைத்து செல்ல தொடங்கினார். ஜஸ்மீன் வாலியா தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் ஜஸ்மீன் வாலியாவுக்கும் ரசிகர்கள் உருவாக தொடங்கினர்.

அதற்கேற்ப ஜஸ்மீன் வாலியா இந்தியில் வெளியான சில வீடியோ பாடல்களில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்மீன் வாலியா இருவரும் தங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுவதை நிறுத்தி கொண்டுள்ளனர். இருவரது ஃபாலோயர்கள் பட்டியலில் இருவரின் பெயருமே இல்லாமல் உள்ளது.

இதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்மீன் வாலியா இருவருக்கும் இடையில் பிரேக் அப் நடந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஹர்திக் பாண்டியா - ஜஸ்மீன் வாலியா இருவரும் காதலித்து வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐபிஎல் தொடரின் போது ஜஸ்மீன் வாலியா மும்பை அணியின் பேருந்திலேயே பயணித்து வந்தார்.

அந்த அளவிற்கு இருவரும் நெருக்கம் காட்டினர். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு பின் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையில் பிரேக் அப் நடந்ததற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஆனால் ஜஸ்மீன் வாலியா இந்தியாவை விட்டு மீண்டும் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார் என்பதை அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் உறுதி செய்கின்றனர்.

Story first published: Saturday, July 19, 2025, 17:54 [IST]
Other articles published on Jul 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+