Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளானில் நடந்த சிறு தவறு.. சூப்பர் மேனாக மாறி சரிசெய்த கே.எல்.ராகுல்.. அரண்டுப்போன ஆஸி, கேப்டன்!

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும் செய்த அட்டகாச ஸ்கெட்ச்சால் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட் சிக்கிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே அடுத்த்தடுத்து அதிர்ச்சி கொடுத்தனர் இந்திய பவுலர்கள்.

சிராஜின் ஓப்பனிங்

சிராஜின் ஓப்பனிங்

ஆட்டத்தின் 2வது ஓவரில் முகமது சிராஜின் வேகத்தில் சிக்கிய ஓப்பனிங் வீரர் டிராவிஸ் ஹெட் ஸ்டம்புகள் பறக்க விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 5 ரன்களுக்கெல்லாம் ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் மீது தான் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் இந்திய களத்தில் ஸ்மித் மிகச்சிறப்பாக செயல்படக்கூடியவர். ஒருபுறம் மிட்செல் மார்ஷ் அதிரடி காட்டிக்கொண்டிருந்ததால், ஸ்ம்த் நிலைத்துவிடக்கூடாது என்பதில் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் தீவிரமாக இருந்தனர்.

பாண்ட்யாவின் ப்ளான்

பாண்ட்யாவின் ப்ளான்

ஸ்டீவ் ஸ்மித் பெரும்பாலும் பவுண்டரிகளை அடிக்க முயற்சித்துக்கொண்டே இருந்தார். இதனால் 29 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களை அடித்டிருந்தார். எனவே அவுட் சைட் ஆஃப் திசையில் நன்கு வைடராக வீச பாண்ட்யா முடிவு செய்தார். இதற்கேற்றார் போலவே விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலும் நகர்ந்து ஆஃப்சைடில் நகர்ந்து நின்றிருந்தார். பவுண்டரிக்கான ஆசையில் இருந்த ஸ்மித், அழகாக வந்த பந்தை கட்ஷாட்டால் விரட்ட வேண்டும் என முயற்சித்தார்.

ஒரு இன்ச் பவுன்ஸ்

ஒரு இன்ச் பவுன்ஸ்

ஆனால் பந்து ஒரு இன்ச் பவுன்ஸாக வீசப்பட்டதால், எட்ஜாகி சென்றது. எதிர்பார்த்ததை விட பந்து மிகவும் வைடாக சென்றது. எனினும் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதில் உறுதியோடு இருந்த கே.எல்.ராகுல் சூப்பர் மேனை போல ஒரு டைவை அடித்து பந்தை கைக்குள் அடக்கினார். இதனை பார்த்து ஸ்மித்தே ஒர் நிமிடம் திகைத்துப்போனார்.

வியந்துப்போன ரசிகர்கள்

வியந்துப்போன ரசிகர்கள்

பேட்டிங்கில் சரியான ஃபார்மில் இல்லை என விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் கே.எல்.ராகுல், நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால் பல பவுண்டரிகளை மிகவும் ரிஸ்க் எடுத்து தடுத்து நிறுத்தினார். இதே போல முக்கியமான ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் பேட்டிங்கிலும் நன்றாக செயல்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

Story first published: Friday, March 17, 2023, 15:35 [IST]
Other articles published on Mar 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+