For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்ட்யாவுக்கு இன்று மீண்டும் திருமணம்.. பிரமாண்ட அரண்மனை புக்கிங்.. படையெடுக்கும் வீரர்கள்!

உதய்பூர்: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கு மீண்டும் பிரமாண்ட முறையில் திருமணம் நடக்கவிருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான ஆதியா ஷெட்டியை திருமணம் செய்துக்கொண்டார். இதே போல மற்றொரு ஸ்டார் வீரர் அக்‌ஷர் பட்டேலும் திருமணத்தை நடந்தி முடித்தார்.

இந்நிலையில் தான் இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். தனது மனைவி நடாஷாவை தான் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறாராம்.

திருமண வாழ்வு

திருமண வாழ்வு

ஹர்திக் பாண்ட்யாவும், செர்பியாவை சேர்ந்த நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்து மே மாதத்திலேயே திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த நடாஷாவுக்கு 2020ம் ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது. திருமணமாகி 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழலில் தற்போது பிரமாண்ட திருமணத்திற்கு ஆசைப்பட்டுள்ளனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்த ஜோடிக்கு திருமணம் நடந்த போது இந்தியாவில் கொரோனா தாக்குதல் உச்சகட்டத்தில் இருந்தது. இதனால் நண்பர்கள், உறவினர்கள் யாரையும் பெரியளவில் அழைக்க முடியாமல் மிகவும் எளிமையாக செய்துவிட்டனர். எனவே காதலர் தினமான இன்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது இந்திய வீரர்கள் எவ்வித போட்டியும் இல்லாமல் உள்ளனர் என்பதால் அனைவரும் கலந்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

அரண்மனை

அரண்மனை

2வது முறையாக திருமணம் என்றாலும் அது சாதாரணமாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. ஏனென்றால் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனை ஒன்றை முழுவதுமாக வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு திரைப்படங்களில் காட்டப்படுவதை போல பல கோடிகள் செலவில் மிகப்பெரிய வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

உணவிற்கான ஏற்பாடு

உணவிற்கான ஏற்பாடு

பாண்ட்யாவின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் உலகின் நட்சத்திரங்கள் அனைவருக்கும் பலமான விருந்து பரிமாரப்படவுள்ளது. அவர்களுக்காக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் உயரிய உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Tuesday, February 14, 2023, 12:43 [IST]
Other articles published on Feb 14, 2023
English summary
Team India's Star cricket player Hardik pandya and Natasa stankovic to marry again in valentines day at udaipur
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+