Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குடும்பத்தின் புதிய உறுப்பினர்... அறிவித்த பாண்டியா... வாழ்த்துக்களை பகிர்ந்த பிரபலங்கள்

டெல்லி : தன்னுடைய காதலி நடாஷா ஸ்டான்கோவிச் கர்ப்பமாக உள்ளதாக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Hardik Pandya soon to be father, Natasha Stankovic pregnancy confirmed

இந்த பதிவை பாண்டியா பகிர்ந்தவுடன் அவரது சக வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள், டிவி நட்சத்திரங்கள் ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாண்டியாவின் பகிர்விற்கு கமெண்ட் அளித்துள்ள விராட் கோலி, இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் பாண்டியாவின் குடும்பத்தின் 3வது உறுப்பினருக்கு தன்னுடைய அன்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

அறிவித்த ஹர்திக் பாண்டியா

அறிவித்த ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஜனவரி 1ம் தேதி தன்னுடைய காதலியும் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் நடுக்கடலில் வித்தியாசமான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தன்னுடைய காதலி கர்ப்பமாக இருப்பதாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய பதிவை பகிர்ந்துள்ளார்.

எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்

எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்

இருவரும் இணைந்து புதிய உயிரை எதிர்கொள்ள தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் மற்றும் டிவி நட்சத்திரங்கள் ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து வாழ்த்து மழையில் இந்த ஜோடி நனைந்து வருகிறது.

ரவி சாஸ்திரி வாழ்த்து

ரவி சாஸ்திரி வாழ்த்து

ஹர்திக் பாண்டியாவின் பதிவில் அவருக்கும் நடாஷாவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார் கேப்டன் விராட் கோலி. அவருடைய குடும்பத்தின் மூன்றாவது உறுப்பினருக்கு தன்னுடைய ஏராளமான அன்பையும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பாண்டியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

இதேபோல சக கிரிக்கெட் வீரர்கள் முகமது ஷமி, யுஸ்வேந்திர சஹால், மயங்க் அகர்வால் உள்ளிட்டோரும் ஹர்திக் பாண்டியா -நடாஷா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உடற்பயிற்சி, சமையல் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும் பாண்டியா -நடாஷா ஜோடி, இந்த அறிவிப்பையும் மிகவும் உற்சாகமாக பகிர்ந்துள்ளது.

Story first published: Monday, June 1, 2020, 14:02 [IST]
Other articles published on Jun 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+