Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் பதவியேற்ற ஹர்திக் பாண்ட்யா.. 5வது டி20 போட்டியில் ரசிகர்கள் அதிர்ச்சி.. இந்திய அணி பேட்டிங்!

ஃப்ளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5வது டி20 போட்டியில் இந்திய அணியில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Recommended Video

IND vs WI 5th T20 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி *Cricket

இரு அணிகளும் மோதும் கடைசிப்போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள சென்ரல் ப்ரோவார்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆனால் டாஸில் நின்றது ரோகித் சர்மா இல்லை.

கேப்டனான ஹர்திக்

கேப்டனான ஹர்திக்

கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்ட்யா இன்று கேப்டனாக செயல்படுகிறார். ரோகித் சர்மாவுடன் சேர்த்து சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், ரிஷப் பண்ட் ஆகிய முன்னணி வீரர்களும் இன்று வெளியேறியுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக ஒரு புதிய முயற்சியுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

 புது டாப் ஆர்டர்

புது டாப் ஆர்டர்

தொடக்க வீரர்களாக இன்று சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்ட நிலையில் இன்று டாப் ஆர்டரில் விளையாடுகிறார். இதே போல மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த போட்டியில் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

பக்க பலமாய் சீனியர்கள்

பக்க பலமாய் சீனியர்கள்

மிடில் ஆர்டரில் வழக்கம் போல ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். ஆசியக்கோப்பை தொடருக்கு தினேஷ் கார்த்திக் தேவை என்பதால், அவரை தொடர்ந்து 5 போட்டிகளிலும் பயன்படுத்தி தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இன்று அவர் சிறப்பாக செயல்படவேண்டியது முக்கியம்.

 பவுலிங் படை

பவுலிங் படை

பந்துவீச்சை பொறுத்தவரையில் 4 போட்டிகளாக காத்திருந்த குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் சுழற்பந்துவீச்சுக்கு உள்ளனர். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் இளம் வீரர்கள் ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் களமிறங்குகின்றனர். இவருக்கு பக்கபலமாய் ஹர்திக் பாண்ட்யாவும் இருக்கவுள்ளார்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங்

Story first published: Sunday, August 7, 2022, 20:10 [IST]
Other articles published on Aug 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+