For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்வளவு நாள் எங்கேயா இருந்த? ஹர்திக் பாண்டியாவின் மாஸ் அறிவிப்பு.. பேட்ஸ்மேன்கள் கலக்கம் !

மவுண்ட் மவுங்கனி : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் மூன்று ஆல் ரவுண்டர்கள் மற்றும் மூன்று வேக பந்துவீச்சாளர்களை கொண்டு ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணியை எதிர்கொண்டார்.

இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.குறிப்பாக ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா, நான்கு முக்கிய விக்கெட்களையும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.

ஸ்பெஷல் ஆட்டம்

ஸ்பெஷல் ஆட்டம்

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, இதனை விட சிறந்த முடிவு எதுவாகவும் இருக்காது. அணியில் இருந்த அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றினர். சூரியக்குமாரியாதவ் தன்னுடைய ஸ்பெஷல் ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினார். நாங்கள் 170 அல்லது 175 ரன்கள் தான் அடித்திருப்போம். ஆனால் சூரிய குமாருடைய ஆட்டம் இந்த வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

ஆக்கோரஷம் தேவை

ஆக்கோரஷம் தேவை

பந்துவீச்சாளர்கள் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டனர். காரணம் அவர்கள் இன்று ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தில் இருந்தனர். அதற்காக பந்து வீசும் ஒவ்வொரு பந்திலும் விக்கெடுகளை வீழ்த்த வேண்டும் என்பது அல்ல. பந்தை வைத்து ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என்பது முக்கியம். இன்று ஆடுகளம் மிகவும் ஈரம் ஆக இருந்தது.

மாஸ் அறிவிப்பு

மாஸ் அறிவிப்பு

இந்த சூழலில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு நிச்சயமாக அவர்களை பாராட்ட வேண்டும் .கேப்டனாக அணியில் இன்னும் நிறைய பந்துவீச்சு தெரிந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய இந்த யுக்தி எப்போதும் பலன் தராது இருப்பினும் அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பந்து வீச தெரிந்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

மகிழ்ச்சியாக விளையாடுங்கள்

மகிழ்ச்சியாக விளையாடுங்கள்

அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் தொழில் முறையில் கவனம் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். அவர்களும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ஆட்டத்தை மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அணியில் அனைவரும் சந்தோஷமான மனநிலையில் உருவாக்க விரும்புகிறேன்.எங்கள் அணியில் மற்றவர்களுடைய செயல்பாட்டை பார்த்து சந்தோஷமடையும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள்.

ஹர்திக் விருப்பம்

ஹர்திக் விருப்பம்

அதனை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.அதுதான் மிகவும் முக்கியம். கடைசி ஆட்டத்தில் எத்தனை பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எனக்கு தெரியாது ஏனென்றால் ஒரு போட்டி தான் எஞ்சி இருக்கிறது .ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது எனது நிலைபாடு என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Sunday, November 20, 2022, 18:27 [IST]
Other articles published on Nov 20, 2022
English summary
Hardik Pandya asking batsman to learn bowling in upcoming days இவ்வளவு நாள் எங்கேயா இருந்த? ஹர்திக் பாண்டியாவின் மாஸ் அறிவிப்பு.. பேட்ஸ்மேன்கள் கலக்கம் !
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+