Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு புதிய கேப்டனாகும் ஹர்திக் பாண்டியா.. பயிற்சியாளராகும் லட்சுமண்.. பிசிசிஐ செம பிளான்

மும்பை : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு உள்ளார்.

தென்ஆப்பிரிக்கா தொடரில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் , ரிஷப் பண்ட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ரிஷப் பண்டின் செயல்பாடு போதிய அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

 ஹர்திக் கேப்டன்

ஹர்திக் கேப்டன்

இந்த நிலையில் இந்திய அணி வரும் 26ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி அயர்லாந்துக்கு சென்று 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது . இதற்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்று உள்ளார். பயிற்சியாளராக லட்சுமன் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

ஏன் ரிஷப் பண்ட் இல்லை?

ஏன் ரிஷப் பண்ட் இல்லை?

குஜராத் அணிக்கு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று தந்தார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது இந்திய அணி டி20 போட்டியில் விளையாடும் அதேவேளையில் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஒரு அணி அங்கு செல்கிறது . டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் முக்கியமான வீரர் என்பதால் தான் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இரண்டு அணி

இரண்டு அணி

இங்கிலாந்துக்கு எதிரான ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தத் தொடர் முடிந்தவுடன் 7ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இடைவெளியின்றி போட்டிகள் நடைபெறுவதால் ஒரே சமயத்தில் இரண்டு அணியை பிசிசிஐ அனுப்ப உள்ளது.

எதிர்கால கேப்டன்

எதிர்கால கேப்டன்

அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொருத்து அடுத்த கேப்டனுக்கான பந்தயத்தில் அவரும் இடம்பெறலாம். அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் சஞ்சு சாம்சன் ராகுல் திரிபாதி ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது. இதே அணி இங்கிலாந்துக்குச் சென்று அங்கு 2 பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.

Story first published: Wednesday, June 15, 2022, 21:21 [IST]
Other articles published on Jun 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+