Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்ட்யாவின் ஒற்றை முடிவு.. 2 வீரர்களின் தலையெழுத்தே மாறும்.. முடிவெடுத்த ரோகித் சர்மா!

மும்பை: ஹர்திக் பாண்ட்யாவை குறிவைத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது.

 இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடரில் மோசமாக தடுமாறிய இந்திய அணி, இந்த முறை பல யோசனைகளுக்கு பிறகு அணியை தேர்வு செய்துள்ளது. ஆனால் மீண்டும் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரையும் ஒன்றாக கொண்டு வந்துள்ளது தான் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆசிய கோப்பையில் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவருக்கு தான் வாய்ப்பு கொடுக்க முடியும் என்பதால் நிலையான ப்ளேயிங் 11 இல்லாமல் இருந்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய அணியின் டாப் ஆர்டரில் ரோகித், கே.எல்.ராகுல், சூர்யகுமார், விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா என மிகவும் பலமான வீரர்கள் பொருந்திவிட்டனர். இதனால் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் யாரேனும் ஒருவருக்கு கொடுத்தால் மட்டுமே 6வது பவுலரை பயன்படுத்த முடியும். ஒருவேளை இருவரையும் சேர்த்தால் 5 பவுலர்களே இருப்பார்கள்.

 பாண்ட்யா தான் தீர்வு

பாண்ட்யா தான் தீர்வு

இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு ஹர்திக் பாண்ட்யா முடிவுகட்டலாம். ஆஸ்திரேலிய களத்தில் பந்துவீச்சாளர்களுக்கு அதிக பவுன்ஸும், வேகமும் கிடைக்கும். ஹர்திக் பாண்ட்யாவின் முக்கிய பலமே பவுன்சர்கள்தான். எனவே இந்தியாவின் 5வது பவுலராக 4 ஓவர்களையும் ஹர்திக் பாண்ட்யா செயல்படலாம்.

பலன் என்ன

பலன் என்ன

ஒருவேளை பாண்ட்யா அதனை செய்தால், ஹூடா போன்ற ஒரு ஆல்ரவுண்டரை எடுக்க தேவை இருக்காது. பின்னர் எளிதாக தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய இருவரையும் ப்ளேயிங் 11ல் கொண்டு வரலாம். எனவே இதுகுறித்து பாண்ட்யாவிடம் ரோகித் சர்மா தீவிர ஆலோசனை செய்து வருவதாகவும், உடற்தகுதியை சரியாக வைத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

Story first published: Friday, September 16, 2022, 17:27 [IST]
Other articles published on Sep 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+