Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வருங்கால கணவருக்கு பான்கேக் செய்து அசத்திய நடிகை... வைரல் வீடியோ வெளியீடு

மும்பை : தன்னுடைய வருங்கால கணவர் ஹர்திக் பாண்டியாவிற்காக நடாஷா ஸ்டான்கோவிச் பான்கேக்குகளை செய்துதர அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்திக்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் அனைத்து வீரர்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு தஞ்சமளிக்கும் ஒரே இடமாக சமூக வலைதளங்கள் காணப்படுகின்றன.

சும்மாவே இன்ஸ்டா மற்றும் டிவிட்டர் பக்கத்துல தன்னோட அலம்பல்களை தொடர்ந்து வெளியிட்டுவரும் ஹர்திக் பாண்டியாவிற்கு வெறும் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆகியிருக்கு இந்த முடக்கம்.

ஹர்திக் பாண்டியா முடக்கம்

ஹர்திக் பாண்டியா முடக்கம்

கடந்த 2019 செப்டம்பரில் சர்வதேச அளவிலான தனது இறுதிப்போட்டியில் விளையாடினார் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா. இதையடுத்து முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் அவரது கேரியரில் புகுந்து விளையாடி விட்டது.

நிச்சயதார்த்த வீடியோ

நிச்சயதார்த்த வீடியோ

சும்மாவே சமூக வலைதளங்களில் புகுந்து விளையாடுவார் ஹர்திக் பாண்டியா. கடந்த புத்தாண்டில், பாலிவுட் நடிகை நடாஷாவுடனான தன்னுடைய காதல் புரபோசலை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பினார். பலருக்கும் இந்த செய்தி அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இருவரும் தங்களை வீட்டிற்குள்ளேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

வீடியோ வெளியிட்ட பாண்டியா

வீடியோ வெளியிட்ட பாண்டியா

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ஹர்திக் பாண்டியா தன்னுடைய குடும்பத்தினருடன் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், தன்னுடைய அண்ணன், அவரது மனைவி, நடாஷா மற்றும் தான் அடங்கிய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். பயிற்சிக்கு பிறகான அந்த புகைப்படம் வைரலானது. இந்நிலையில் தற்போது நடாஷா பான்கேக் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் பாண்டியா.

சாப்பிட தயாரான பாண்டியா

சாப்பிட தயாரான பாண்டியா

நடாஷாவும் பாண்டியாவும் ஒரே வீட்டில் இருக்கின்றனர். இந்நிலையில், நடாஷா பாண்டியாவிற்கு பான்கேக் செய்ய, அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்ட ஹர்திக் பாண்டியா, அதை சாப்பிடவும் தயாரானார். அவரது பதிவில் பெருமிதம் தெரிந்ததை காண முடிந்தது.

Story first published: Friday, April 10, 2020, 14:25 [IST]
Other articles published on Apr 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+