Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியா நீ சொக்கத்தங்கம் யா! மும்பை ஆடுகள ஊழியர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு தந்து கவுரவம்

மும்பை: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டுக்கு அப்பால் ஹர்திக் செய்த இந்த செயல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை பயிற்சி சமயத்தில், மும்பை வாங்கேடே மைதானத்தில் நள்ளிரவு வரை பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, அவருக்கு உதவிய மைதான ஊழியர்களுக்கு வெகுமதி அளிப்பதாக உறுதியளித்த அவர், தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.வியாழக்கிழமை, பாண்டியா வாங்கேடே மைதான ஊழியர்களுக்கு காசோலைகளை வழங்கினார். கடினமான பயிற்சி சூழலுக்கு உதவிய அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஹர்திக் இதை செய்துள்ளார்.

ஒரு கிரிக்கெட் வீரரின் பயணத்தில், பெரும்பாலும் கவனிக்கப்படாத இந்த உழைப்பாளர் குழுவுக்கு அவர் மதிப்பு கொடுத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இந்தியாவின் இரண்டு முறை டி20 உலகக் கோப்பை வெற்றிகளில் ஹர்திக் பாண்டியா முக்கியப் பங்காற்றினார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தீவிர பயிற்சிகளை செயது வருகிறார். கடைசியாக 2020ஆம் ஆண்டு தாடன மும்பை இந்தியன்ஸ் அணி கேர்ப்பையை வென்றது. அதுவும் ரோகித்துக்கு பதிலாக ஹர்திக் கேப்டனாக மும்பை அணிக்கு நிர்ணயித்த போது, பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அந்த எதிர்ப்பை எல்லாம் ஹர்திக் பாண்டியா தனது ஆல்ரவுண்ட் செயல்பாடு மூலம் மாற்றிவிட்டார். அண்மையில் டி20 உலககோப்பையை வென்ற பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, "எனக்கு இன்னும் 10 ஆண்டுகள் உள்ளன, மேலும் 10 ஐசிசி பட்டங்களை வெல்ல விரும்புகிறேன். அதுதான் எனது இலக்கு" என லட்சியத்தை அவர் வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா போல், தோனியும் பல முறை ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ரொக்கம் வழங்கி கவுரவித்து இருக்கிறார்.

Story first published: Friday, March 27, 2026, 14:35 [IST]
Other articles published on Mar 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+